Kathir News
Begin typing your search above and press return to search.

சிவராமன் தற்கொலையில் திடீர் திருப்பம்..ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

சிவராமன் தற்கொலையில் திடீர் திருப்பம்..ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!
X

SushmithaBy : Sushmitha

  |  23 Aug 2024 12:52 PM GMT

கடந்த 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தேசிய மாணவர் படையின் என்.சி.சி பயிற்சி முகாம் போலியாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். கலந்து கொண்ட மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அப்பொழுது கடந்த ஒன்பதாம் தேதி கலையரங்கில் 12 வயது சிறுமி ஒருவர் வழக்கம்போல் உறங்கிக் கொண்டிருந்த பொழுது, அதிகாலை 3 மணி அளவில் அங்கு வந்த தேசிய மாணவர் படையும் பயிற்றுநர் என்று கூறப்படுகின்ற நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிவராமன் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பலர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர்.

சிவராமன் தற்கொலை:

ஆனால் திடீரென்று இந்த விவகாரத்தில் தொடர்பான முக்கிய நபராக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான சிவராமன் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவரைப் போன்று சிவராமனின் தந்தை சாலையில் மதுபோதையில் இருந்த பொழுது விபத்தில் சிக்கி இறந்ததாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக முக்கிய குற்றவாளி மற்றும் அவரது தந்தை இறந்த சம்பவம் பல சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே, எலி மருந்து சாப்பிட்டு, இன்று காலை உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றனர். மேலும், அவரது தந்தை அசோக் குமார் என்பவரும், நேற்று இரவு சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

முக்கிய புள்ளியை காப்பாற்ற முயற்சியா?

இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது. பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இது தற்கொலை தான்!

ஆனால் தனது முன்னாள் கட்சி நிர்வாகி சிவராமன் தற்கொலை செய்து கொண்டதில் எந்த சந்தேகமும் இல்லை அவர் தான் செய்த குற்ற செயலை உணர்ந்து இப்படி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று சீமான் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கூறியுள்ளார். இந்த நிலையில் முக்கிய புள்ளியை காப்பாற்றுவதற்காக சிவராமன் எலி மருந்து சாப்பிட்டாரா என்று கேள்வியை எழுப்பி ஆதாரத்துடன் அண்ணாமலை குற்றம் சாடியுள்ளார்.

இதற்கிடையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், அவரது தந்தை என இரண்டு மரணங்களுமே சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன என அண்ணாமலை அறிக்கை கொடுத்த சில மணி நேரத்தில் சிவராமன் தந்தை இறந்த விபத்து சிசிடிவி காட்சிகள் அனைத்து மீடியாக்களிலும் வெளியானது

ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை:

மேலும், இவ்விவகாரம் தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், எலி மருந்து சாப்பிட்டதால், இன்று காலை உயிரிழந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின. கடந்த 19 அன்று அவர் கைது செய்யப்பட்டதும், தப்பியோட முயற்சித்ததாகக் கூறி, கால் உடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, அவர் எலி மருந்து சாப்பிட்டது குறித்து எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை. அவரது உடல் நலனும் எந்த பாதிப்புக்குள்ளானதாகத் தெரியவில்லை.

அவர் கைது செய்யப்படப்போவதை அறிந்ததும், கடந்த 16 மற்றும் 18 ஆகிய இரு தினங்களும் எலி மருந்து உண்டதாக, திடீரென்று நேற்று மாலை முதல், செய்திகள் வெளியாகின. இன்று காலை, அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் எலி மருந்து சாப்பிட்டதாகக் கூறப்படுபவர், நேற்று மாலை வரை, ஐந்து நாட்களாக, எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்தார் என்பது மர்மமாக இருக்கிறது. அவர் எலி மருந்து உண்டதாக, திடீரென்று நேற்று மாலை முதல் செய்திகள் வெளியானதும், சந்தேகத்தை எழுப்புகிறது. கால் உடைந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி அன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவருக்கு, ஐந்து நாட்களாக, உடலில் வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவில்லையா?


கடந்த ஜூலை மாதம், சிவராமன், எலி மருந்து தின்று தற்கொலை முயற்சி செய்திருப்பதாகத் தெரிய வருகிறது. தற்போது அதனைப் பயன்படுத்தி, இந்தப் பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளைக் காப்பாற்ற, சிவராமன் எலி மருந்து தின்றதால் மரணமடைந்து விட்டார் என்று கூறப்படுகிறதோ என்ற கேள்வி வலுப்படுகிறது. இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, முழுமையான விசாரணை நடத்தி, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

தனது கட்சி நிர்வாகியின் தற்கொலையில் எந்த சந்தேகமும் இல்லை என்று சீமான் ஒரு பக்கம் கூற, மறுபக்கம் அண்ணாமலை இந்த தற்கொலைக்கு பின்னால் முக்கிய புள்ளிகள் இருப்பதாகவும், இந்த தற்கொலையை சந்தேகம் இருப்பதாகவும், ஆதாரத்துடன் எக்ஸ் வலைதள பக்கத்தில் குற்றம் சாடி இருப்பதும் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News