Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தியின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த பா.ஜனதா!

சீன கம்யூனிஸ்டு கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ராகுல்காந்தி முயற்சிக்கிறார் என்று பாஜக கூறியுள்ளது.

அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தியின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த பா.ஜனதா!
X

KarthigaBy : Karthiga

  |  12 Sep 2024 4:55 AM GMT

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரிடையே பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆர். எஸ்.எஸ்.ஐ விமர்சித்தார்.பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா மீது மக்களின் பயம் போய்விட்டது என்றும் உலக அளவில் உற்பத்தியில் சீனா அதிகம் செலுத்துவதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் பா.ஜனதா தலைமையகத்தில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கௌரவ் பாட்டியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது ராகுல் காந்தியின் பேச்சு பற்றி கேட்டதற்கு அவர் கூறியதாவது:-ராகுல் காந்தி முதிர்ச்சியற்றவர் பகுதிநேர தலைவர் என்று அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் அவரது தோளில் மக்கள் பெரும் சுமையை ஏற்றி வைத்து விட்டனர். ஆனால் அவர் இந்திய ஜனநாயகத்தில் ஒரு கரும்புள்ளி என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன் வெளிநாட்டில் என்ன பேசுவது என்று கூட அவருக்குத் தெரியவில்லை .காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது .அதனால் சீனாவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட அவரால் பேச முடியாது .

அவர் இந்தியாவை பலவீனப்படுத்துகிறார் .சீனாவுக்கு ஆதரவாக நிற்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியினுடைய ஒப்பந்தப்படி இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ராகுல் காந்தி தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறார். நான் சொல்வது தவறு என்றால் ராகுல் காந்தியோ அல்லது மல்லிகார்ஜுன கார்கேவோ அந்த ஒப்பந்தத்தை பகிரங்கமாக வெளியிடத்தக்கவர் யாரோ என்று சவால் விடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News