வயநாடு பேரிடர் நிவாரண நிதி.. வழக்கம் போல் ஏமாற்றிய கேரள அரசு.. பா.ஜ.கவின் முக்கிய குற்றச்சாட்டு?
By : Bharathi Latha
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பறித்ததாகக் குற்றம் சாட்டி, கேரளாவின் பா.ஜ.கவின் முக்கிய கிறிஸ்தவத் தலைவர் அனூப் ஆண்டனி ஜோசப், மாநில சி.பி.ஐ-எம் தலைமையிலான அரசாங்கம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நிவாரணப் பணிகளுக்கான நிதியை அடிக்கடி தவறாகப் பயன்படுத்துவதை மாநில அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். அவர் கூறும் போது, “வயநாடு நிலச்சரிவின் அதிர்ச்சிகரமான சோகத்திலிருந்து கேரளா இன்னும் மீளவில்லை, ஆனால் இப்போது மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், கேரள அரசாங்கம் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை தவறாகப் பயன்படுத்திய விதம் மற்றும் மோசடி செய்த விதம்" குறித்து அவர் எடுத்துரைத்தார்.
மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், “வயநாடு மக்களின் நிவாரணத்திற்காக கோடிக்கணக்கான கோடிகள் எப்படி முறைகேடாக பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை அறிக்கைகள் நன்றாகவே காட்டியுள்ளன. இது கற்பனை செய்ய முடியாதது. வயநாட்டில் உயிரிழந்த ஒவ்வொருவரின் இறுதிச் சடங்கிற்கு ரூ.75,000 செலவிடப்பட்டது. தன்னார்வலர்களின் உணவுக்காக ரூ.12 கோடி செலவிடப்பட்டது. கேரளா பாஜக தலைவர் மேலும் கூறுகையில், “அதேபோல், நிவாரணம் என்ற பெயரில் மாநில அரசாங்கத்தால் பல கோடிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2018 வெள்ளத்தின் போது இதே போன்ற விஷயங்கள் நடந்தது. மாநில அரசு எப்போதும் இந்த பேரழிவுகளை ஊழல் மற்றும் நிதிக்கான வாய்ப்பாக பயன்படுத்துகிறது. எனினும், கேரள அரசு, இதில் எந்த உண்மையும் இல்லை என்று கூறி மறுத்துள்ளது. மதிப்பீடுகள் தவறாக சித்தரிக்கப்படுகின்றன" என்று கூறி தப்பிக்க பார்ப்பதாக அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.
இதற்கிடையில், உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகள் "எதார்த்தமற்றவை" என்று காங்கிரஸ் விவரித்துள்ளது. குறிப்பாக கேரளா சார்பில் மத்திய அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மெமோராண்டம் எனப்படும் அறிக்கையில் கூட உடல்கள் புதைக்கப்பட்டு அதற்கான செலவுகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது, அதேவேளை பிரபல தோட்ட நிறுவனம் ஒன்று நன்கொடையாக வழங்கிய பணத்தில் இது மேற்கொள்ளப்பட்டது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். அந்த நேரத்தில் முழு வேலையும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரின் தொண்டர்களால் செய்யப்பட்டது. குறிப்பாணைத் தயாரிக்கும் முறை இதுவல்ல, இப்படிக் கொடுத்தால், சரியாக வரவேண்டியதும் வராது” என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறினார்.
Input & Image courtesy: The Commune News