Kathir News
Begin typing your search above and press return to search.

கருணாநிதி பெயரில் திமுக அரசால் தொடங்கப்பட்ட பூங்கா ஐந்து நாட்களில் பழுதடைந்து பதம் பார்த்த அவலம்!

திமுக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த பூங்கா ஐந்து நாட்களிலேயே மக்கள் விமர்சிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது.

கருணாநிதி பெயரில் திமுக அரசால் தொடங்கப்பட்ட பூங்கா ஐந்து நாட்களில் பழுதடைந்து பதம் பார்த்த அவலம்!
X

KarthigaBy : Karthiga

  |  14 Oct 2024 12:34 PM GMT

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதியின் பெயரில் சென்னையில் திறந்த பூங்கா ஐந்து நாட்களிலேயே பழுதடைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

விடியா திமுக முதல்வர், தனது தந்தை திரு. கருணாநிதி பெயரில் சென்னையில் பூங்கா திறந்த வெறும் ஐந்தே நாட்களில், பூங்காவில் உள்ள ஜிப்லைன் (Zipline) பழுதடைந்து, அதில் பயணித்த இரு பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி, அந்தரத்திலேயே இருந்து, பின் கயிறு மூலமாக கீழிறக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. அரசுப் பூங்கா புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு, கலெக்ஷன்-கரப்ஷன்-கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட விடியா திமுக அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.

திரு. கருணாநிதி பெயரிலான இந்த பூங்காவிற்குள் நுழையவே நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அது போக, ஜிப்லைனுக்கு 250 ரூபாய் என அதில் உள்ள வசதி ஒவ்வொன்றிற்கும் தனி கட்டணம் வசூல் செய்கிறது விடியா திமுக அரசு. இந்த பூங்காவை முழுவதும் சுற்றிப்பார்க்க 650 ரூபாய் ஆகிறது. தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக இந்த திரு.கருணாநிதி பூங்காவிற்கு வசூலிக்கிறது விடியா திமுக அரசு.பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News