தி.மு.கவின் இரட்டை வேடம்.. வன்மையாக கண்டிக்கும் தமிழிசை சௌந்தரராஜன்...
By : Bharathi Latha
நேற்று முன்தினம் கவர்னர் ரவி பங்கேற்ற தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது அதில், 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்' என்ற வரி விடுபட்டது. இது பெரிய பிரச்னையாக உருவாக்கப்பட்டது. இதற்காக கவர்னரை கண்டித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். இந்த ஒரு சம்பவத்தை வைத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். உடனடியாக கவர்னர் ரவி மற்றும் கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் இன்னும் முடியவில்லை.
இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும் போது, பாஜவினர் மத்திய அரசு தமிழ் மீது பற்று இல்லாதவர்கள் என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்துவருகிறார். அதன் வெளிப்பாடு தான், பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதம். நாம் தான் தமிழ் பற்றாளர்கள் என்று பொய்யான ஒரு தமிழ்ப்பற்றை சொல்லி இதுவரை மக்களை ஏமாற்றினோம். இனிமேலும் ஏமாற்ற வேண்டும் என்ற ஒரு அவசரம் தெரிகிறது. இது தொடர்பாக அவர்களுடைய சமூக வலைதள பதிவும் அவ்வாறுதான் அமைந்து வருகிறது.
என்னை அவர்கள் கேலி செய்யும் பொழுது ஹிந்தி இசை என விமர்சிக்கின்றனர். எனது பெயரில் மட்டுமல்லாமல் உயிரிலும் தமிழ் உள்ளது. திமுக அமைச்சர் வீட்டு குழந்தைகள் எத்தனை பேர் தமிழ் படிக்கிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகள் விடுபட்டது எனக்கு ஒப்புதல் கிடையாது. தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதும் பாடப்பட வேண்டும். ஆனால், உள்நோக்கம் இல்லாமல் செய்த ஒன்றை உள்நோக்கத்தோடு செய்தார்கள் என்று கற்பிப்பது தான் தவறு என்கிறேன். தெரியாமல் நடந்த ஒரு தவற்றை தெரிந்தே தான் பண்ணினார்கள் என்று கூறி பழி போடுவது திமுக வழக்கமாக கொண்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார். இரட்டை வேடத்தை தான் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என அவர் கூறினார்.
Input & Image courtesy: News