Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியை எதிர்க்கும் திராவிட மாடல் வெளியிட்ட செவிலியர்களுக்கான புதிய விளம்பரம், சேலம் தரணிதரனை வச்சு செய்யும் இணையவாசிகள்!

இந்தியை எதிர்க்கும் திராவிட மாடல் வெளியிட்ட செவிலியர்களுக்கான புதிய விளம்பரம், சேலம் தரணிதரனை வச்சு செய்யும் இணையவாசிகள்!
X

SushmithaBy : Sushmitha

  |  23 Oct 2024 4:52 PM GMT

காலங்காலமாக இந்தி எதிர்ப்புக்கு பெயர் போனது திமுக அரசு வெளிநாட்டு மொழி என்று அவர்கள் கூறிக்கொள்ளும் இந்தி மீதான வெறுப்பு இருந்தபோதிலும் உரையாடலின் ஊடகமாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதில் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். இது ஒருபுறம் இருக்க திமுக அரசின் நான் முதல்வன் ஃபினிஷிங் ஸ்கூல் முயற்சியால் தமிழ்நாடு அபெக்ஸ் ஸ்கில் டெவலப்மெண்ட் சென்டர் ஃபார் ஹெல்த்கேர் மூலம் செவிலியர்களுக்கான இலவச ஜெர்மன் மொழிப் பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


1.7 மில்லியன் நிபுணர்களின் இடைவெளியை எதிர்கொள்கிறது இதில் ஒவ்வொரு ஆண்டும் 35,000 செவிலியர் காலியிடங்கள் அதிகரித்து வரும் சுகாதார தேவைகளால் இயக்கப்படுகிறது செவிலியர்களுக்கு எந்த கட்டணமும் இன்றி வழங்கப்படும் எட்டு மாத படிப்பு ஜெர்மன் மொழியில் B2-நிலை தேர்ச்சியை அடைய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும். இது பாராட்டுக்குரியதாக இருந்தாலும் திமுக செய்தித் தொடர்பாளர் சேலம் தரணிதரன் குழப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது.


அதாவது ஜெர்மனிக்கு ஆண்டுதோறும் 35 ஆயிரம் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி செவிலியர்கள் ஜெர்மன் மொழியை கற்றுக் கொண்டால் பிஎம்டபிள்யூ போர்ச் மெர்சிடிஸ் போன்ற சிறந்த ஜெர்மன் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் சேர்க்கப்படுவார்கள் என்றும் இதில் ஹிந்தியை அவர்கள் கற்றுக் கொண்டால் எந்த நிறுவனத்தில் வேலை செய்வார்கள் என்று கேள்வி எழுப்பும் படி தனது சமூக வலைதள பக்கத்தில் சேலம் தரணிதரன் பதிவிட்டு இருக்கிறார்


அவர் பதிவிட்டுள்ள விளம்பரம் செவிலியர்களை குறி வைத்திருந்தாலும் அந்த விளம்பரத்திற்கு மேலாக அவர் பதிவிட்ட கேப்சன் தற்பொழுது விமர்சனத்தை பெற்று வருகிறது. அதாவது கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம் செவிலியர்களுக்கானது மேலும் ஜெர்மனியில் ஒவ்வொரு வருடமும் 35 ஆயிரம் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள் அப்படி இருக்கும் பொழுது செவிலியர்கள் ஏன் நிறுவனங்களுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்று நெடிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் மேலும் தான் NIT SciencesPO Paris இல் பட்டம் பெற்றுள்ளதாகவும், தான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் என்றும் பதிவிட்டுள்ளார் இப்படி ஆக்ஸ்போர்ட்டில் பட்டம் பெற்ற ஒருவரின் ஐ க்யூ லெவல் இவ்வளவுதானா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News