திமுகவின் என் ஆர் ஐ பிரிவு வெளியிட்ட இந்திய வரைபடம், வெடித்த எதிர்ப்புகள்!
By : Sushmitha
இந்தியாவின் விண்வெளித் துறைமுகத்தைக் கொண்டாடும் வகையில் சீன ராக்கெட்டுகளைக் காட்சிப்படுத்திய ஆளும் திமுக மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த முறை அதன் NRI பிரிவு சமூக ஊடக தளமான X இல் இந்திய வரைபடத்தை பகிர்ந்துள்ளது அதுவும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சில பகுதிகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு சொந்தமானது என தவறாக சித்தரிக்கும் வகையில் அந்த வரைபடம் இருந்தது.
இதற்கு தேச துரோக செயல் என்று திமுக மீது பலர் குற்றம் சாட்டினர் இதனால் அந்த பதிவை உடனடியாக நீக்கி தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சியில் கல்வியைப் போலவே பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது என்ற தலைப்புடன் திருத்தப்பட்ட வரைபடத்தை பகிர்ந்தது
இதனை தமிழக பாஜகவின் மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் திமுக இப்படி செய்வது முதல் முறை அல்ல 2020இல் உதயநிதி ஸ்டாலின் இதை தவறை ஒரு வீடியோவில் செய்தார் மற்றும் நான் அப்போதைய போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்ட பிறகே இந்திய வரைபடம் தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோவை அவர் நீக்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநில செயலாளர் கூறியதைப் போன்று 2022 நவம்பர் உலக ஜனநாயக மன்றம் மற்றும் ஐநா இளைஞர் தலைவர் என்று கூறிக் கொள்ளும் சேலம் தரணிதரன் தற்போதைய திமுக செய்து தொடர்பாளர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சாய் சின் ஆகியவற்றை தவிர்த்து இந்தியாவின் சிதைந்த வரைபடத்தை வெளியிட்டு இருந்தார்.
வரைபடத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து அவர் வட இந்திய எதிர்ப்பு அறிக்கையை வெளியிட்டார் இது கடுமையான பின்னடைவு மற்றும் சாத்தியமான சட்டரீதியான விளைவுகளை எதிர்கொண்ட பிறகு அந்த ட்வீட்டை தரணிதரன் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் 2020 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் மற்றும் சீன ஆக்கிரமிப்பு லடாக் ஆகியவற்றைத் தவிர்த்து இந்தியாவின் வரைபடத்தைக் கொண்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளார் திமுகவின் இந்த அதிகாரப்பூர்வ வீடியோ அந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டு 3,000க்கும் அதிகமான ஷேர்களைப் பெற்றது இதை பாஜக செய்தித் தொடர்பாளர் சூர்யா ட்விட்டரில் குறிப்பிடத்தக்க பிழையை முன்னிலைப்படுத்தினார் இந்தியாவைப் பற்றிய திமுகவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினார்.
இதனால் ஏற்பட்ட பின்னடைவால் நவம்பர் 14 அன்று திமுக வீடியோவை பேஸ்புக்கில் இருந்து நீக்கியது ஆனால் எந்த விளக்கமும் மன்னிப்பும் அளிக்கவில்லை. உதயநிதி ஸ்டாலினின் ட்வீட்டும் நீக்கப்பட்டது மேலும் கட்சியோ அல்லது அதன் தலைவர்களோ இந்த பிரச்சினையை பேசவில்லை அல்லது எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
ஆனால் இந்திய வரைபடத்தை தவறாக சித்தரிப்பது கிரிமினல் குற்றமாகி ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 100 கோடி வரை அபராதம் விதிக்கக்கூடிய புவியியல் தகவல் மசோதா 2016 ஐ மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.