இர்பான் செய்தது ஒரு கொலை குற்றமல்ல:மாடல் அமைச்சரின் புதிய விளக்கம்!
By : Sushmitha
பிரபல யூடியூப்பரான இர்பானின் சமீபத்திய செயல்கள் அனைத்துமே சட்டங்களை மீறுவதாக இருந்து வருகிறது முதலில் தனக்கு பிறக்கப் போகின்ற குழந்தையின் பாலினத்தை துபாய்க்கு சென்று அறிந்து கொண்ட இர்பான் அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார் ஏனென்றால் தமிழகத்தின் பிறக்கப் போகின்ற குழந்தையின் பாலினத்தை வெளியில் கூறுவது சட்டப்படியான குற்றச்செயல் இந்த குற்ற செயலுக்கே இர்பான் மீது விமர்சனங்கள் அதிகமாக முன்வைக்கப்பட்டது மேலும் நீதிமன்றம் வரை சென்ற இந்த விவகாரம் இறுதியில் இர்பான் தான் சமூக வலைதளத்தில் பதிவிட்ட தன் குழந்தையின் பாலின விவர பதிவை நீக்கினார்
இதற்குப் பிறகு இர்பானுக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது அதனை வீடியோவாக எடுத்து தன் குழந்தை பிறந்ததை கொண்டாடும் வகையில் தன் குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. இதை இர்பான் செய்யும் பொழுது அவருக்கு அருகில் மருத்துவர்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து தன் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் காட்சியை இர்பான் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்
இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது மேலும் இர்பான் வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சரான சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கூறியிருந்தார் அதோடு இந்த சம்பவம் நடந்த மருத்துவமனை மீது சுகாதாரத்துறை உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டது அறுவை சிகிச்சை நடந்த மருத்துவமனைக்கு 50,000 ரூபாய் அபராதத்தையும் பத்து நாட்களுக்கு மருத்துவமனையில் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளது
இதற்கு அடுத்து இர்பான் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பார்த்தால் இதுவரை மருத்துவமனைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பாதி கூட அவர் மீது எடுக்கப்படவில்லை அரசு தரப்பில் இர்பானிற்கு நோட்டீஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் இர்ஃபான் செய்தது கொலை குற்றமல்ல இது உண்மையில் இவ்வளவு பெரிய பிரச்சனையா என்று சாதாரணமாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துள்ளார்
தொடர்ச்சியாக இர்பான் செய்து வருகின்ற சட்ட விதிமீறல்கள் திமுக அரசால் கண்டும் காணாமல் இருந்து வருவது வாடிக்கையாகி வருகிறது அதற்கேற்ற வகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்பொழுது கூறியுள்ள கருத்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது அதுமட்டுமின்றி இர்பான் போன்ற செல்வாக்கு மிக்கவர்கள் இதற்கு முன்னர் மாநிலத்திற்குள் குறிப்பாக தேர்தல் நேரத்தில் திமுகவின் சித்தாந்தத்தை வளர்க்க உதவியதாக பார்வையாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
மேலும் 2022 நவம்பரில் திமுகவின் வாரிசும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுடன் மக்கள் தொடர்பு வீடியோவை அவர் செய்தார் அந்த வீடியோவில் இர்பான் உதயநிதி ஸ்டாலினிடம் நீங்கள் இப்போது என் நண்பராகிவிட்டீர்களா நீ என் நண்பன் சரியா என உதயநிதி கேட்டு அதற்கு இர்பான் கை கொடுங்கள் அண்ணா இனிமேல் நாங்கள் நண்பர்கள் உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் வருவது போல் நான் போலீசில் சிக்கி உங்களை அழைத்தால் நீங்கள் எனக்கு உதவுவீர்களா என்று இர்பான் கேட்டதும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க திமுக தயங்குவதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது