Kathir News
Begin typing your search above and press return to search.

திராவிட மாடல்:தமிழை காக்கும் கட்சி அமைச்சரின் உபதேசம் ஊருக்கு மட்டும்தானா வீட்டுக்கு இல்லையா!

திராவிட மாடல்:தமிழை காக்கும் கட்சி அமைச்சரின் உபதேசம் ஊருக்கு மட்டும்தானா வீட்டுக்கு இல்லையா!
X

SushmithaBy : Sushmitha

  |  18 Nov 2024 11:02 AM GMT

பள்ளிக்கல்வி தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களை தொழில் முனைவோர் ஆக்க அவர்களின் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கொய்யா மொழி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார் மேலும் சான்றிதழ்களை பெற்ற மாணவர்களின் அமைச்சரின் இரண்டாவது மகனான கவினும் இடம்பெற்றிருந்தார் இதனை அடுத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கல்வி சார்ந்த படிப்புகளை தாண்டி சில கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவற்றை என் மகன் பேசும் பொழுது ஒரு தந்தையாக நான் பெருமை கொள்கிறேன் என்று கூறினார்

இதனை அடுத்து சான்றிதழ் பெற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சரின் மகனான கவின் சான்றிதழ் பெற்றது குறித்து பேசும்பொழுது எனக்கு கணித பாடம் மிகவும் எளிதானது பிரெஞ்சு பாடம் தான் மிகவும் கடினம் அதைத்தான் மொழி பாடமாக எடுத்திருக்கிறேன் தமிழை நான் மொழி பாடமாக எடுக்கவில்லை என்று கூறினார்

முன்னதாக இது என் யோசனை அல்ல இது என் குழு தோழர்களின் யோசனை திட்டத்திற்கு நான் அதிகம் உதவவில்லை அதிர்ச்சியூட்டும் வகையில் நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் தான் இந்த திட்டத்தைப் பற்றி கற்றுக்கொண்டேன் மேலும் பரிசை வென்றதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை அதை என் தந்தையிடமிருந்து பெற்றதில் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பேசியுள்ளார்

பயோடெக் இன்சூரன்ஸ் ஸ்டார்ட்அப் என விவரிக்கப்படும் இந்தத் திட்டம் கடன் வழங்குதல் மற்றும் காப்பீட்டை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது இது ஒரு குழு முயற்சி என்று கூறப்படுகிறது இருப்பினும் கவின் ஆர்வமின்மையும் ஈடுபாடு இல்லாமையும் அவர் ஏன் முதல் இடத்தில் சேர்க்கப்பட்டார் என்பது கேள்வியை எழுப்புகிறது

அதுமட்டுமின்றி தமிழை பாதுகாப்போம் தமிழை காத்து ஹிந்தியை எதிர்க்கிறோம் என்று கூறி வருகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசில் ஒரு அமைச்சராக அதுவும் பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சராக உள்ளவரின் மகன் தமிழை தவிர்த்து இருப்பது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களை பெற்று வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News