ஜாமீனில் வந்தவரை அமைச்சராக்குவீர்களா?உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
By : Sushmitha
வேலை வாய்ப்பு மோசடியில் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாக ஜாமீன் பெற்ற அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழகத்தில் அமைச்சராக நியமித்த முடிவு குறித்து உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
அதாவது கடந்த செப்டம்பர் 26 தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக முதன்மையான வழக்கைக் கண்டறிந்த போதிலும் அவருக்கு ஜாமீன் வழங்கியது இதனை அடுத்து செப்டம்பர் 29 அன்று ஜாமீன் வழங்கப்பட்ட சில நாட்களிலே அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்றார் மின்சாரம் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு மற்றும் மதுவிலக்கு மற்றும் கலால் துறைகளுக்கான பொறுப்புகளை ஏற்றார்
இந்த நிலையில் இன்று டிசம்பர் 2 நீதிபதி அபய் எஸ்.ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாமீன் முடிவை மறுபரிசீலனை செய்வதற்கான மனுவை விசாரித்து வந்தது பாலாஜி விடுதலையான பிறகு அமைச்சராக பதவியேற்பதால் அவரது செல்வாக்கு மிக்க பதவியை வைத்து சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்று மனுதாரர்கள் வாதிட்டனர்
மேலும் விசாரணையின் போது நீதிபதி ஓகா செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குகிறோம் அடுத்த நாளே அவர் அமைச்சராகிறார் மூத்த கேபினட் அமைச்சராக அவர் பதவியேற்றுள்ள நிலையில் சாட்சிகள் மிரட்டப்படலாம் என்று எவரும் நினைக்கலாம் இங்கே என்ன நடக்கிறது என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்