Kathir News
Begin typing your search above and press return to search.

நாடகமாடும் திமுக அரசு:டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை கைவிட அண்ணாமலை மத்திய அரசிற்கு கோரிக்கை!

நாடகமாடும் திமுக அரசு:டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை கைவிட அண்ணாமலை மத்திய அரசிற்கு கோரிக்கை!
X

SushmithaBy : Sushmitha

  |  9 Dec 2024 2:27 PM GMT

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர் பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய கோரி மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட இந்த உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வணங்கக்கூடாது என்று மத்திய அரசை வடிவத்தில் தமிழக சட்டப்பேரவையில் அரசின் தனி தீர்மானத்தை கொண்டு வந்தார் அதோடு தமிழகத்திற்குள் டங்க்ஸ்டன் சுரங்கத் திட்டம் வரக்கூடிய வாய்ப்பே இல்லை தடுத்து நிறுத்துவோம் ஒருவேளை டன் டன் சுரங்கம் வந்தால் இந்த முதல்வர் பொறுப்பில் நான் இருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்

ஆனால் நான் இருக்கும் வரை சுரங்கம் வராது வந்தால் நான் பொறுப்பில் இருந்து விலகிவிடுகிறேன் என்று கூறும் முதல்வர் இதை 10 மாதத்திற்கு முன்பாகவே சொல்லி இருக்கலாமே அப்போது விட்டு விட்டு தற்போது மதுரையில் மக்கள் போராட்டம் நடத்தியதும் திமுக அரசு நாடகமாடுகிறது என பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்

மேலும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசின் தவறான முழுமையற்ற தகவல்களால் மதுரை அரிட்டாபட்டி நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது இது தொடர்பாக, மாண்புமிகு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சருக்கு அவர்களுக்குக் கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாமல் மதுரை அரிட்டாபட்டி நாயக்கர்பட்டி கவட்டையம்பட்டி எட்டிமங்கலம் ஏ.வல்லாளப்பட்டி அரிட்டாபட்டி கிடாரிப்பட்டி நரசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து தொலைப்பேசியிலும் அழைத்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்

மாண்புமிகு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்கள் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதைக் குறித்துப் பரிசீலிக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து திமுக அரசு தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே இந்தச் சுரங்கம் அமைப்பது குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன தற்போது பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியில் விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன விவசாயிகள் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாடுகளையும் நமது பிரதமர் அவர்கள் மேற்கொள்ள மாட்டார் என்பது உறுதி என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதியது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News