யார் உடைப்பார் இந்த சஸ்பென்ஸை தமிழிசையின் சந்தேக கேள்வி
By : Sushmitha
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய கூட்டணி கட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா சமீப நாட்களாக திமுகவிற்கு எதிரான கருத்துக்களை பொதுவெளிகளில் முன்வைத்து வருகிறார் குறிப்பாக திமுக உடனான கூட்டணி குறித்த விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் இதனால் திமுகவிற்கும் விசிக விற்கும் இடையே கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் திருமாவளவன் தொடர்ச்சியாக திமுக உடனான கூட்டணியை நிலைக்க ஆதவ் அர்ஜூனாவின் கருத்துக்களை மறுத்து வருகிறார்
இருப்பினும் திமுகவின் தலைமையை கடுமையாக ஆதவ் விமர்சித்து வருகிற நிலையில் அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் விசிகவிலிருந்து ஆறு மாத காலத்திற்கு தற்கால இடைநீக்கம் செய்தார் இந்த நிலையில் முன்னாள் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் இந்த ஆறு மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா அல்லது திருமாவளவன் அணி மாறுவாரா இந்த நேரத்தில் சஸ்பென்ட் மிகவும் சந்தேகத்திற்குரியது சஸ்பென்ஸை யார் உடைப்பார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்