மீண்டும் மீண்டுமா!தரமற்ற முட்டைகளை வழங்கி குழந்தைகள் உயிருடன் விளையாடும் தமிழக அரசு!
By : Sushmitha
தமிழகத்தை தொடர்ச்சியாக அரசு பள்ளிகளில் வழங்கப்படுகின்ற மதிய உணவில் அழுகிய முட்டைகள் வழங்கப்படுவது வாடிக்கையாக்கி வருகிறது அந்த வரிசையில் கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதி பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டுள்ளது
இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பள்ளிக் குழந்தைகளுக்கு மத்திய உணவில் அழுகிய முட்டைகளை வழங்கியிருக்கிறது டிசாஸ்டர் மாடல் திமுக அரசு கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதி பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன குறைந்தபட்சம் மாதம் ஒருமுறையாவது தமிழகப் பள்ளிகளில் இது நிகழ்கிறது குழந்தைகளின் ஊட்டச்சத்துக்காக மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரசு வழங்கும் நிதி எங்கு செல்கிறது
பள்ளிகளில் வழங்கப்பட வேண்டிய முட்டைகள் அரசு முத்திரையோடு கடைகளில் விற்கப்படுவதாகச் செய்திகளைப் பலமுறை பார்த்திருக்கிறோம் ஆனால் குழந்தைகளுக்கு தரமற்ற முட்டைகள் கொடுக்கப்படுகின்றன இதற்கெல்லாம் பொறுப்பான அழுகிய முட்டை அமைச்சர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை
உணவில் தரமற்ற முட்டைகளை வழங்கி குழந்தைகள் உயிருடன் விளையாடிக் கொண்டிருப்பதை அழுகிய முட்டை அமைச்சர் கீதா ஜீவன் உணர வேண்டும் இனியும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால் திமுக அரசுக்கு பெற்றோர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்