Kathir News
Begin typing your search above and press return to search.

வெறும் கண்துடைப்புக்காக அறிவிப்புகளை வெளியிட்டு தொழில்துறையினரை ஏமாற்றுவதுதான் நோக்கமா?அண்ணாமலை பளீர்!

வெறும் கண்துடைப்புக்காக அறிவிப்புகளை வெளியிட்டு தொழில்துறையினரை ஏமாற்றுவதுதான் நோக்கமா?அண்ணாமலை பளீர்!
X

SushmithaBy : Sushmitha

  |  27 Jan 2025 1:15 PM

வெறும் கண்துடைப்புக்காக அறிவிப்புகளை வெளியிட்டு தொழில்துறையினரை ஏமாற்றுவதுதான் நோக்கமா சிறு குறு நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தொழில்துறையினரை திமுக அரசு ஏமாற்றி வருவதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தொடர்ச்சியாக மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களை இன்னலுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் திமுக விளம்பரத்துக்காக கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு தொழில்துறையினரையும் ஏமாற்றி வருகிறது இதனால் சிறு குறு நடுத்தர தொழில்முனைவோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்

கோயம்புத்தூரில் மட்டும் 12 கிலோவாட் மின்சுமைக்குக் குறைவாகப் பயன்படுத்தும் சுமார் 52,367 சிறு தொழிற்சாலைகள் உள்ளன ஒவ்வொரு ஆண்டும் திமுக அரசின் மின்கட்டண உயர்வால் இந்தச் சிறு தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன

திமுக அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்து பல ஆர்ப்பாட்டங்களை நடத்திய பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று 12 கிலோவாட் மின்சுமைக்குக் குறைவாகப் பயன்படுத்தும் நிறுவனங்களின் வகையை மாற்றுவது குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்தை பெற்ற பின் பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்

இதனை அடுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அனுப்பிய கடிதத்தில் இந்த மாற்றம் இனி வரும் காலங்களுக்கான மின்கட்டணக் கணக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இந்த நிறுவனங்கள் 12 கிலோவாட் மின்சுமைக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது தானியங்கி முறையில் அவர்களுக்கான மின்கட்டணம் III-B பிரிவுக்கு மாற்றப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது ஆனால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் இந்த சிறு குறு நடுத்தர நிறுவனங்களிடம் உயர்த்தப்பட்ட மின் கட்டணமே வசூலிக்கப்படுகிறது

இது குறித்து தொழில் அமைப்புகள் கேள்வி எழுப்பியதற்கு இந்த மாற்றத்திற்காகத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்துத் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அப்படி விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நாளில் இருந்துதான் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என்றும் தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் கோயம்புத்தூர் பகுதியின் தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளார்

கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தபடி அப்போதிருந்தே இந்தக் கட்டண மாற்றம் நடைமுறைக்கு வந்ததாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும் 12 கிலோவாட் மின்சுமைக்கு அதிகமாகப் பயன்படுத்தும் நிறுவனங்களை அதிக கட்டணப் பிரிவுக்கு மாற்ற மென்பொருள் மூலமாகத் தானாகவே மாற்றம் செய்ய இயலும்போது குறைந்த கட்டணப் பிரிவுக்கு மாற்றம் செய்வதற்கு ஏன் தொழில் நிறுவனங்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது திமுக அரசு வெறும் கண்துடைப்புக்காக அறிவிப்புகளை வெளியிட்டு தொழில்துறையினரை ஏமாற்றுவது தான் நோக்கமா என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News