தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் காரசார பேட்டி.!
By : Bharathi Latha
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தனது வீட்டில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை என்று கூறி இருந்தார். விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன் கொடுமைகளால் தமிழ்நாடு தலைகுனிந்து காணப்படுகிறது. தேர்தல் எப்போது வரும் என மக்கள் காத்திருக்கிறார்கள். 2026-ல் திமுக ஆட்சி அமைக்கும் என்ற முதலமைச்சரின் கனவு என்றும் பலிக்காது.
2026 தி.மு.க தான் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் பேசி வருகிறார். ஆனால், அது நடக்காது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் குடும்ப மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மாதம் ராமநாதபுரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் பிடிபட்ட போது, முதலமைச்சர் பொம்மை போல இருந்து வெறும் கடிதம் மட்டுமே எழுதி வருகிறார். எந்த நிதியும் பெற்று வரவில்லை என்று கூறினார்.
இதிலிருந்து என்ன தெரிய வருகிறது, திமுக வாய்மையே வெல்லும் என்ற பெயரை மாற்றி பொய்யே வெல்லும் என்று திமுக அரசு பெயர் மாற்றி வைத்துக் கொள்ளலாம் என விமர்சனம் செய்தார்.