கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் தப்பித்தது எப்படி?அவர்களை கைது செய்ய திமுக அரசின் திட்டம் என்ன?அண்ணாமலை கேள்வி?

சமீப நாட்களாக சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்து மக்களோடு மக்களாக வாழ்ந்து வரும் வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்ட வருகின்றனர் இந்த மாத தொடக்கத்தில் கூட வங்கதேசத்தைச் சேர்ந்த ஏழு பேர் திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தஞ்சமடைந்திருந்தனர் அனுமதி இன்றி நுழைந்த ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடந்து வருவதாக செய்திகள் வெளியானது அதுமட்டுமின்றி நடப்பு மாதத்தில் மட்டும் திருப்பூரில் சட்டவிரோதமாக தஞ்சம் அடைந்திருந்த 98 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர்
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பங்களாதேஷ்ஷை சேர்ந்தவர்களில் 75 பேர் தப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி சிறப்பு முகாமில் இருந்து காணாமல் போன சட்டவிரோத வங்கதேச நாட்டினரை கண்டறிந்து கைது செய்ய திமுக அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது என்ற கேள்வியை முன் வைத்துள்ளார்
மேலும் திமுக அரசின் கைப்பாவையாக தமிழக காவல்துறை இருப்பதாகவும் சாதாரண மக்களுக்கு தமிழகம் தற்போது ஒரு காவல் மாநிலமாகவும் குற்றவாளிகளுக்கு ஒரு புகலிடமாகவும் இருப்பதாக விமர்சனம் செய்துள்ளார் அதோடு திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த வங்கதேச நாட்டினர் ஜாமினில் வெளிவந்த நிலையில் 75 பேரும் காணாமல் போனது எப்படி திமுக அரசின் கீழ் உள்ள மாநில காவல்துறை இதை எவ்வாறு அனுமதித்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்