டெல்லியில் பா.ஜ.க தேர்தல் பிரசாரம்: பிரதமர் மோடியின் அனல் தெறிக்கும் பேச்சு!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் தற்பொழுது சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பல்வேறு கட்சிகள் உமரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால், குடிசைகள் அகற்றப்படாது என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். வரும் 5-ம் தேதி நடைபெறும் டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, ஆர்.கே.புரம் பகுதியில் நடந்த பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசும் போது, பாஜக ஆட்சிக்கு வந்தால், எந்தவொரு மக்கள் நலத்திட்டங்களும் நிறுத்தப்படாது.
பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் இணைந்து செயல்படுவோம். எந்தவொரு பயனுள்ள திட்டங்களையும் ரத்து செய்ய மாட்டோம். நாங்கள் வெற்றி பெற்றால், குடிசைகள் அகற்றப்படாது. இந்த அறிவிப்பை வெற்று பேச்சுக்காக அறிவிக்கவில்லை. ஆனால், ஆம்ஆத்மி குடிசை விவகாரத்தில் பொய் தகவலை பரப்புகின்றனர்.
பூர்வாஞ்சலி மற்றும் பிஹாரி சமூக மக்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன்.ஏனெனில், நான் பூர்வாஞ்சல் தொகுதி எம்.பி.,யாக இருந்துள்ளேன். கொரோனா சமயத்தில் சில கட்சிகள் அவர்களை மோசமாக நடத்தினார்கள். டில்லியை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள். ஆனால், பாஜக எப்போதும், பூர்வாஞ்சல் மற்றும் பிஹார் மக்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று கூறினார்.
Input & Image Courtesy:News