தற்சார்பு இந்தியாவிற்கான வரைபடம்: பக்கா பிளானுடன் இருக்கும் மோடி அரசு.!

அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்த, முதன்மையான இந்தியாவை நிர்மாணிக்கும் மோடி அரசின் தொலைநோக்குப் பார்வையை கொண்டுள்ளது மத்திய பட்ஜெட் 2025-26 என மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அனைவரையும் உள்ளடக்கிய இந்த பட்ஜெட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடியையும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அவர் பாராட்டியுள்ளார்.
தொடர்ச்சியான எக்ஸ் தள பதிவுகளில் தமது கருத்துக்களை தெரிவித்துள்ள அமித் ஷா, விவசாயிகள், ஏழை மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் முதல் பெண்கள் கல்வி, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, சுகாதாரம், புத்தொழில்கள், புதிய கண்டுபிடிப்பு, முதலீடு வரை அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய இந்த பட்ஜெட் தற்சார்பு இந்தியா என்ற மோடியின் கண்ணோட்டத்திற்கு மூல வரைபடமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் இதயத்தில் எப்போதும் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை என்ற பட்ஜெட் அறிவிப்பு உள்ளது என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
Input & Image Courtesy: News