திருப்பரங்குன்ற மலை விவகாரத்தில் வந்த திடீர் தீர்ப்பு:திமுகவிற்கு ஷாக் கொடுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!

மதுரை திருப்பரங்குன்ற மலை விவகாரத்தில் அதன் மீதான உரிமைகாக பிப்ரவரி நான்காம் தேதி இந்து முன்னணி போராட்டம் அறிவித்ததை காவல்துறை மறுத்தது அதுமட்டுமின்றி பிப்ரவரி 3 மற்றும் நான்காம் தேதி 144 தடை உத்தரவையும் மதுரை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தியது இதனால் திருப்பரங்குன்றம் பரபரப்பை சந்தித்துள்ள நிலையில் எங்கள் போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து இந்து அமைப்பினர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்
இந்த நிலையில் முருக பக்தர்கள் சார்பில் திருப்பரங்குன்றம் தைப்பூச விழாவிற்கு பக்தர்கள் செய்வதற்கு காவல் துறையில் விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று மதுரை கலெக்டர் போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் இந்து மத விரோதம் திமுகவின் மரபணுவிலேயே இருக்கிறது இந்துக்கள் எதை செய்தாலும் அதை தடுப்பதையும் ஏளனம் செய்வதையும் தான் தொடர்ந்து செய்கிறார்கள் எல்லா மதத்தையும் சமமாக பார்க்காமல் இந்து மத உரிமைகளை மட்டும் பறித்து வருகிறது இந்த ஆட்சி அதுமட்டுமின்றி திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இந்து அமைப்பினரின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை
திருப்பரங்குன்றத்தில் தற்போது நிலவு வருகின்ற பிரச்சனை என்ன என்பது அனைவருக்கும் தெரியும் அங்கு ஏற்பட்டுள்ள சில அடிப்படை வாதிகளின் செயல்களால் இந்துக்களுக்கு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது அதை எதிர்த்து தான் போராட்டம் அறிவிக்கப்பட்டது ஆனால் அதுவும் மறுக்கப்பட்டது தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் நிலவி வருகின்ற காவல்துறை கட்டுப்பாட்டால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலையும் உள்ளது
தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி தான் நடக்கிறதா அல்லது ஆங்கிலேயர் மற்றும் ஒளவுரங்கசீப்பின் ஆட்சி நடைபெறுகிறதா என எண்ணம் ஏற்படும் அளவிற்கு பொதுவெளியில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை ஏற்பட்டுள்ளது மற்ற மாநிலங்களில் குறிப்பாக பாஜகவை கடுமையாக எதிர்கின்ற மாநிலங்களில் கூட பாஜகவின் போராட்டங்களுக்கு அனுமதி கிடைக்கிறது ஆனால் தமிழகத்தில் குறிப்பாக திமுக ஆட்சியில் எப்பொழுதுமே அனுமதி கிடைப்பதே கிடையாது இதை சுட்டிக்காட்டி பேசிய கூட்டணி கட்சித் தலைவர் பாலகிருஷ்ணனையே அப்பொறுப்பிலிருந்து திமுக அரசு மாற்றிவிட்டது என்று கூறியுள்ளார்
மேலும் தொடரப்பட்டுள்ள வழக்கில் நல்ல முடிவு கிடைக்கும் என்றும் கூறியிருந்தார் அவர் கூறியது படியே இன்று ஹை கோர்ட் மதுரை கிளை மதுரை பழங்காநத்தம் இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை இந்து முன்னணி அமைப்பு ஆர்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது