வீடியோவை திரித்து வெளியிட்ட மீடியாவிற்கு ஸ்மார்ட் ரிப்ளே கொடுத்த எம்பி சுரேஷ் கோபி:இதுதான் நான் பேசியது!

கேரளாவில் முதன்முறையாக பாஜகவின் வெற்றியை நிலைநாட்டியதில் முக்கிய பங்காற்றியவர் நடிகர் சுரேஷ் கோபி கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியின் எம்பி ஆக உள்ள நடிகர் சுரேஷ் கோபி மத்திய அமைச்சராகவும் இருக்கிறார் இவர் சமீபத்தில் டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் பேசிய வீடியோ சமூக வலைதளம் மற்றும் சில ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டது அதற்கு சுரேஷ் கோபி கொடுத்துள்ள பதிலும் வீடியோவை தவறாக திரித்து வெளியிட்ட ஊடகத்திற்கும் சரியான பதிலடி கொடுத்துள்ளார்
அதாவது டெல்லி மயூர் விகாரில் மலையாள மொழி பேசும் மக்களிடம் பிரச்சாரம் செய்த அமைச்சர் சுரேஷ்கோபி பழங்குடியினர் நல துறை அமைச்சராக என்றுமே பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் தான் நியமிக்கப்படுகிறார்கள் ஆனால் அது நாட்டின் சாபம் இதை மாற்றி பழங்குடியினர் நலன் சார்ந்த அமைச்சர்களாக பிராமணரையோ நாயுடுவையோ நியமிக்க வேண்டும் அது நடந்தால் தான் பெரிய மாற்றங்கள் ஏற்படும் அதுவே என்னுடைய விருப்பமும் கனவும் என்று பேசினார்
இவரின் இந்த பேச்சு சமூக வலைதளம் மற்றும் பல ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் சுரேஷ்கோபி தனது பேச்சின் முழு வீடியோவையும் வெளியிட்டு அந்த வீடியோவில் பட்டியலின மக்கள் நலத்துறைக்கு முன்னேறிய வகுப்பினரை சேர்ந்தவர்களையும் முன்னேறிய வகுப்பினர் வளர்ச்சிக்கான துறைக்கு பட்டியல் இனத்தவர் அமைச்சராக நியமிக்க வேண்டும் என அமைச்சர் சுரேஷ்கோபி பேசியிருந்தது தெள்ளத்தெளிவாக இடம் பெற்றிருந்தது
இதனைத் தொடர்ந்து தான் வெளியிட்ட வீடியோவிற்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விளக்கம் அளிக்கையில் டெல்லி பிரசாரத்தின் பொழுது நான் பேசியதை சில ஊடகங்கள் சொந்த விருப்பத்திற்காக திரித்து வெளியிட்டுள்ளது இந்தியாவில் பல ஆண்டுகளாக நிலவி வருகின்ற ஜாதி ஏற்றத்தாழ்வுகளை தாண்டி ஒவ்வொரு இந்தியரையும் சமமாக மதிக்க வேண்டும் என்பது பாபாசாகேப் முன்வைத்த பெருங்கனவு அதன்படியே பட்டியலின மக்களை முன்னேறிய வகுப்பினர் பாதுகாக்கவும் முன்னேறிய வகுப்பினரை பட்டியலின மக்கள் பாதுகாக்கவும் வேண்டும் என்பதை விரும்பியே எனது கருத்துக்களை முன்வைத்தேன் எனது பேச்சை தவறாக திரித்து வெளியிட்ட சில ஊடகங்கள் எனது பேச்சின் முழு வீடியோவையும் ஒளிபரப்பி அதன் தைரியத்தை காட்ட வேண்டும் என்று பேசியுள்ளார்