தமிழக ஏடிஜிபி அதிகாரிக்கே இங்கு பாதுகாப்பு இல்லை!மக்கள் நிலைமை என்ன?கேள்விகளால் திணறும் கோபாலபுரம்!

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஏடிஜிபி அதிகாரி கல்பனா நாயக் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தன்னை கொள்ளும் முயற்சியில் நடந்த சம்பவம் என ஏடிஜிபி கல்பனா நாயக் புகார் அளித்திருந்தார் அவர் புகார் அளித்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் சமீபத்தில் ஊடக நேர்காணலில் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் காவல் அதிகாரிக்கு பாதுகாப்பு இங்கே இல்லை சாதாரண பொது மக்களுக்கு எப்படி இருக்கும் என சமூக வலைதளங்களிலும் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது
இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விதிமீறலும் சட்ட மீறலும் திமுக அரசின் கீழ் தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது இந்த அரசு செயல்படும் பரிதாப நிலை குறித்துப் பேசும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட இதில் இருந்து தப்பிக்க முடியவில்லை தமிழ்நாட்டில் ஊழல் தவறான நிர்வாகம் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட தமிழகத்தில் பாதுகாப்பாக உணரவில்லை
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் இரும்புக்கரம் நீதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக உண்மையை மௌனமாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்
மேலும் அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ் அவர்கள் தெரிவித்திருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது
தங்கள் துறையின் ஊழல்களைச் சொன்னதற்கே அவரை கொலை செய்ய துணிந்துவிட்டார்கள் என்பது மிகவும் கீழ்த்தரமானது இந்த செயலுக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார் இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால் அது ஏடிஜிபி-யாக இருந்தால் கூட மிரட்டலும் கொலையும் தான் பதிலா இந்த சூழல் இருக்கும் ஆட்சியில் மக்கள் எப்படி தங்கள் குறைகளை தைரியமாக சொல்ல முடியும்
ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது என்பது முதல்வர் ஸ்டாலின் தான் நிர்வகிப்பதாக சொல்லும் காவல்துறையின் மேல் தானே வைத்துள்ள பெரும் கரும்புள்ளி இந்த கண்டனத்திற்குரிய வெட்கக்கேடான நிலைக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்
இவரை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் பெண் ஏ.டி.ஜி.பியை படுகொலை செய்ய சதியா?சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள்!காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாததற்கும் சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராக இருந்த கல்பனா நாயக் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாகவே தோன்றுகிறது இந்த விவகாரத்தில் உண்மை என்ன?என்பது மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டியதும் காவல் உதவி ஆய்வாளர்கள் நியமனத்தில் சமூகநீதி நிலைநாட்டப்படுவதும் அவசியமாகும்
அதேபோல் காவல் உதவி ஆய்வாளர் நியமனத்தில் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக கல்பனா நாயக்கை படுகொலை செய்யும் நோக்குடன் அவரது அலுவலகத்தில் தீ விபத்து ஏற்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டியது உடனடித் தேவையாகும் எனவே உதவி ஆய்வாளர்கள் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க அரசு ஆணையிட வேண்டும் பெண் ஏடிஜிபி கல்பனா நாயக்கை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கும் தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்