குற்றவாளிகளின் கூடாரமாக தி.மு.கவினர் உள்ளனர்.. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!

சென்னை, ECR-ரில் பெண்கள் அச்சுறுத்தப் பட்ட விவகாரத்தில், அ.தி.மு.க மீது பழி போட்டு திசைதிருப்ப முயற்சி நடப்பதாக, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றஞ் சாட்டியுள்ளார்.மேலும் இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது பற்றி அவர் குறிப்பிடப்படும் பொழுது, "பாலியல் வன்முறை முதல்கொலை, கொள்ளை, போதை பொருட்கள் கடத்தல் வரை, உலகில் உள்ள அனைத்து சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருபவர்கள் ஆளும் தி.மு.கவினர் என்பது, அண்மையில் வெளிவரும் செய்திகளில் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
குற்றவாளிகளின் கூடாரமாக தி.மு.கவினர், திகழும் அவர்கள் தங்கள் மீதான களங்கத்தை மறைக்க, அ.தி.மு.க., மீது பழிபோட்டு, நடந்த பிரச்சினையை திசை திருப் புவது வாடிக்கையாகி விட்டது. சமூக விரோத செயல்களுக்கு, தி.மு.க கொடியே லைசன்ஸ் என்பதை, காவல் துறையே ஒப்புக்கொண்டுள்ளது. தி.மு.க கொடி கட்டிய காரில் வந்து, நள்ளிரவில் பெண்களை மிரட்டியவர் களிடம் வற்புறுத்தி, அவ ரது உறவினர்கள் அ.தி. மு.க.,வோடு தொடர்பு டையவர்கள் என வாக்குமூ லம் வாங்கி, சட்டத்திற்கு புறம்பாக, அதை தி.மு.க., சார்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்புகின்றனர்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலம் முதல் இன்று வரை, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்காத கட்சி அ.தி.மு.க., என்பதை, அனைவரும் அறிவர். அப்படி இருக்கும் பொழுது திமுக வேண்டுமென்று அதிமுக மீது பழியை போட்டு தப்பிக்க பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியிருக்கிறார்.
Input & Image Courtesy: News