அண்ணாமலை பரபரப்பு பிரஸ்மீட்:பக்தர்கள் மேல கைவச்சா நீங்க இருக்க மாட்டீங்க!

திருப்பரங்குன்றம் மலை உரிமை மீதான விவகாரத்தின் பரபரப்பு அடங்கி இன்று விவகாரத்திற்கு பிறகு முதல் முறையாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிற்கு பக்தர்களும் தர்காவிற்கும் செல்ல காவல்துறை அனுமதி வழங்கியது
ஆனாலும் இன்னும் சில நாட்களுக்கு அங்கு பெரும் சர்ச்சை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது முன்னதாக நேற்று பிப்ரவரி 4 அன்று மாலை 5 மணி அளவில் இந்து முன்னணி மற்றும் பிற இந்து அமைப்புகள் பாஜக நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தது
இந்த ஆர்ப்பாட்டம் பற்றி இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களிடம் பேசும் பொழுது வடமாநிலங்களில் நடந்ததை போன்று தமிழகத்திலும் நடக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது எங்க கலவரம் ஏற்பட்டாலும் இரும்பு கரம் கொண்டு அடக்க தயாராக இருக்கிறார் எங்கள் உறுதிமிக்க முதல்வர் இரும்பு மனிதர் என பேசி இருந்தார்
இவரைத் தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஏதாவது விவகாரத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்த வேண்டும் என சிலர் கலவரத்தை தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழகத்தில் அது நிச்சயம் நடக்காது இதனைப் பெரிய விவகாரமாகி அதிக லாபம் அடைய வேண்டும் என்று நினைக்கும் தீய சக்திகளை ஒடுக்குவோம் என பேசியிருந்தார்
இப்படி சட்டத்துறை அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஒடுக்குவோம் அடக்குவோம் என செய்தியாளர்கள் மத்தியில் பேசியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்ன தப்பானவர்களா அங்கு போராடுபவர்கள் முருக பக்தர்கள் அவர்கள் மீது நீங்கள் கை வைத்தால் நீங்க இருக்க மாட்டீங்க திமுகவின் இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் எங்க கிட்ட வேண்டாம் என்று ஆவேசமாக பதில் அளித்துள்ளார்