அரசியலுக்காக முற்போக்கான புதிய கல்வி வரைவை எதிர்ப்பதா?தர்மேந்திர பிரதான் ராகுலுக்கு கேள்வி!

புதிய வரைவு விதிகளை பல்கலை மானியக்குழு வெளியிட்டதற்கு தமிழக உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்புகளை முன் வைத்துள்ளது மேலும் டெல்லியில் திமுக சார்பில் இந்த வரைவு அறிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த நிலையில் மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சில அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் பழமையான மற்றும் காலாவதியான அரசியல் கட்டுக் கதைகளை தக்க வைத்துக் கொள்வதற்காக கல்வி சீர்திருத்தங்களை அச்சுறுத்தல்கள்களாக திருப்புவது கவலையை ஏற்படுத்துகிறது
யுஜிசி வரைவு விதிமுறைகள் அதன் எல்லைகளை சுருக்கவில்லை விரிவு படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது அவை அதிக குரல்களை உள்ளடக்குவதை தான் நோக்கமாகக் கொண்டுள்ளன வரைவு மசோதா கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துகிறது பலவீனப்படுத்தவில்லை
எதிர்ப்பதற்காக ஏதேனும் ஒன்றை எதிர்ப்பது நாகரீகமாக இருக்கலாம் ஆனால் அது ஒரு அற்பமான அரசியல் ராகுலை போன்று தங்களை தாங்களே அரசியலின் சாம்பியன்கள் என அழைத்துக் கொள்பவர்கள் தங்கள் அரசியல் பேச்சை முன் வைப்பதற்கு முன்பு வரைவு விதிமுறையின் உண்மையை படித்துக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்