காங்கிரஸுடம் நாட்டின் வளர்ச்சியை எதிர்பார்க்கக் கூடாது: பிரதமர் மோடி விமர்சனம்.!

By : Bharathi Latha
''அனைவருக்குமான வளர்ச்சி என்பதை காங்கிரசிடம் இருந்து எதிர்பார்ப்பது தவறு'' என்று ராஜ்யசபாவில் பிரதமர் மோடி கூறினார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசும் போது, ஜனாதிபதியின் உரை ஊக்கமளிப்பதாகவும், பயனுள்ளதாகவும், நம்மை முன்னேற்றி செல்வதாகவும் அமைந்துள்ளது. இந்த உரை மீது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
அனைவருக்குமான வளர்ச்சி என்பதை காங்கிரசிடம் இருந்து எதிர்பார்ப்பது தவறு. அது அவர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது.முழு கட்சியும் ஒரே குடும்பத்திற்கு மட்டும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.ஒரே குடும்பத்தை முன்னிறுத்துவது மட்டுமே காங்கிரசின் நோக்கம். வளர்ச்சிக்கான எங்களின் திட்டத்தை மக்கள் சோதித்து புரிந்து கொண்டு ஆதரவு அளிக்கின்றனர். எங்களின் வளர்ச்சிக்கான திட்டம் என்பது நாடே முதன்மை என்பதாகும். வளர்ச்சி மீதான பார்வையால் தான் நாட்டு மக்கள் எங்களை 3வது முறையாக தேர்வு செய்தார்கள். நாட்டின் வளங்களை மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.
ஓ.பி.சி., ஆணையத்திற்கு அங்கீகாரம் கேட்டும் காங்கிரஸ் அதனை தரவில்லை. ஓ.பி.சி., ஆணையத்திற்கு பாஜக அரசு தான் சட்ட அங்கீகாரம் வழங்கியது. பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு சுமூகமான முறையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. பட்டிலினம் . அனைத்து சமுதாயத்தினரும் இதனை வரவேற்றனர். பார்லிமென்டின் இரு அவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது பாஜக தான். புதிய பார்லிமென்டில் முதல் முடிவாக மகளிர் இட ஒதுக்கீடு வழங்குவது இருந்தது. பிறரை பலவீனப்படுத்தாமல் உங்கள் கட்சியை பலப்படுத்த முயற்சி செய்யுங்கள். அப்படி செய்தால், மக்கள் எப்போதாவது காங்கிரசை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. என்று பிரதமர் மோடி பேசினார்.
