Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லியில் பாஜகவுக்கு ஜொலிக்கும் வெற்றி வாய்ப்பு!

டெல்லி சட்டப்பேரவைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் மாலை ஐந்து மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என பெரும்பான்மையான நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

டெல்லியில் பாஜகவுக்கு ஜொலிக்கும் வெற்றி வாய்ப்பு!
X

KarthigaBy : Karthiga

  |  6 Feb 2025 10:15 PM IST

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 23-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதை அடுத்து டெல்லி சட்டப்பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் நேற்று நடத்தியது. மதுபான கொள்கை வழக்கில் சிக்கிச் சென்று ஜாமினில் வெளியே வந்த டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது நேர்மைக்கு மக்கள் மீண்டும் சான்றளித்த பின்பு முதல்வராக வருவேன் என்ற சபதத்துடன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க கெஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

அதேபோல் பாஜக மூத்த தலைவர்கள் டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி பிரச்சாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலையும் விமர்சித்தார் .காங்கிரஸ் கட்சியும் டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கியது. மூன்று கட்சிகளின் தீவிர பிரச்சாரம் கடந்த மூன்றாம் தேதியுடன் ஓய்ந்தது. டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்று 1.56 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு 13.76 சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு நேற்று காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர் .மாலை 6 மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 57.7 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்குப் பதிவு முடிவடைந்த உடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. சட்டப்பேரவை தேர்தல் நேற்று மாலை முடிவடைந்ததை அடுத்து வழக்கம்போல் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. டைம்ஸ் நவ் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி 32 முதல் 37 இடங்களையும் பாஜக 37 முதல் 43 இடங்களையும் காங்கிரஸ் இரண்டு இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டது .என்.டி.டி.வி வெளியிட்ட முடிவில் ஆம் ஆத்மி 10 முதல் 19 இடங்களையும் பாஜக 51 முதல் 60 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்தது. சி.என்.என் வெளியிட்ட முடிவில் ஆம் ஆத்மி 30 இடங்களையும் பாஜக 40 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்தது. பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளன. நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News