பள்ளி முதல் கல்லூரி வரை பாலியல் வன்முறை:அல்வா சாப்பிடும் முதல்வர்,கொந்தளிப்பில் சீமான்!

By : Sushmitha
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி ஈசிஆர் சம்பவம் தொடங்கி இந்த வாரத்தில் மட்டும் வரிசையில் இருக்கும் பாலியல் வன்கொடுமைகள் சம்பவம் கணக்கில் அடங்காமல் போய்விட்டது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆதி திராவிடர் பள்ளியில் மாணவிக்கு கிளாம்பக்கத்திலிருந்து 18 வயது இளம் பெண் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் 13 வயது அரசு பள்ளிச் சிறுமி தற்பொழுது வேலூரில் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு என திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைகள் நடந்த வண்ணம் உள்ளது இவை குற்றம் நடந்த பிறகு செய்திகள் வெளியாகிறது குற்றம் நடப்பதற்கு முன்பு தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டிருந்தால் இந்த ஒரு வாரத்தில் மட்டும் இத்தனை வன்கொடுமை சம்பவங்கள் நடந்திருக்குமா என்பது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது
இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள் பாதிக்கப்படும் பெண்குழந்தைகள் வேதனையில் பெற்றோர்கள் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு அலட்சியமாக அல்வா சாப்பிடும் முதல்வர் என்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்
