Kathir News
Begin typing your search above and press return to search.

நிதியே விடுவிக்கவில்லை?அதற்குள் புது பொய்யா?முதல்வரின் பதிவிற்கு அண்ணாமலை கொடுத்த ரிப்ளே!

நிதியே விடுவிக்கவில்லை?அதற்குள் புது பொய்யா?முதல்வரின் பதிவிற்கு அண்ணாமலை கொடுத்த ரிப்ளே!
X

SushmithaBy : Sushmitha

  |  9 Feb 2025 6:33 PM IST

தமிழகத்தில் திமுகவின் ஊடகமாக விளங்கி வருகின்ற தனியார் செய்தி ஊடகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 2152 கோடி நிதியை பிஎம் ஶ்ரீ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு இணைய மறுத்த காரணத்தினால் பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியை பகிர்ந்து அளித்தது என்ற செய்தி பரபரப்பாக வெளியானது

மேலும் இந்த செய்தியை மேற்கோள்காட்டி தமிழகம் முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகத்திற்கு எதிரான மத்திய பாஜக அரசின் அநீதியான அணுகுமுறைக்கு எல்லையே இல்லை ஹிந்தி திணிப்பு மற்றும் மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததற்காக அவர்கள் வெளிப்படையாக மிரட்டல் விடுத்து தமிழக மாணவர்களுக்கான ரூபாய் 2,152 கோடியைப் பறித்து இப்போது பிற மாநிலங்களுக்கு வழங்கியுள்ளனர் இது வற்புறுத்தலுக்குச் சற்றும் குறைவானதல்ல எங்கள் மாணவர்களின் உரிமைகளுக்காக நின்றதற்காக தண்டிக்கப்படுகிறது ஒரு மாநிலத்திற்கு எதிரான அரசியல் பழிவாங்கலுக்காக கல்விக்கான அணுகலைக் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு இரக்கமற்ற எந்த அரசாங்கமும் இந்திய வரலாற்றில் இருந்ததில்லை தமிழகம் மற்றும் அதன் மக்கள் மீதான அநீதி மற்றும் வெறுப்பின் முகமாக பாஜக மீண்டும் தன்னை நிரூபித்துள்ளது என்று தனது சமூக வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார்

ஆனால் முதல்வரின் இந்த பதிலுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெளிவான விளக்கத்தையும் தவறான செய்தி பரப்பப்படுவதாகவும் தனது கோபத்தையும் விளக்கத்தையும் கொடுத்துள்ளார் அதாவது தமிழகம் தனது பெருமையைத் தொலைத்து எண் கணிதத்திலும் தாய்மொழி அறிவிலும் கடைசி இடத்தில் உள்ளது கல்வியை அரசியலாக்கி கல்வியின் தரத்தை குறைத்து தமிழகக் குழந்தைகளுக்கு, சமமான வாய்ப்புகளையும் உலகத்தரம் வாய்ந்த கல்வியையும் கிடைக்காமல் செய்ததற்காக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினர் வெட்கப்பட வேண்டும்

இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே பிஎம் ஶ்ரீ உட்பட சமக்ர சிக்ஷாவின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு உறுதியளித்தது இந்த உறுதிமொழியை நீங்கள் நிறைவேற்றினீர்களா இல்லையா முதல்வர் அவர்களே

செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள் சமக்ர சிக்ஷாவின் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட நிதி அறிக்கையின்படி 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இன்னும் 2024-25 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு நிதி விடுவிக்கப்படவில்லை அப்படி இருக்கையில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யைப் பரப்ப உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று பதிலளித்துள்ளார் இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News