டெல்லி சட்டமன்றத் தேர்தல்: பா.ஜ.க ஆட்சி அமைக்க முக்கிய காரணங்கள் எவை?

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மீக் கட்சிக்கு ஏமாற்றுமே கிடைத்தது ஆட்சியை தோற்று பாஜகவிடம் பறி கொடுத்தது அக்கட்சியின் முன்னாள் தலைவர் முன்னாள் முதல்வர் கெஜரிவால் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பாஜக இங்கு ஆட்சி அமைக்கிறது. ஆம் ஆத்மி கட்சி பல காரணங்களால் தோல்வியை தழுவியுள்ளது. அவற்றில் சில காரணங்கள், டெல்லி மக்கள் தொகையில் 67.16 சதவிகிதம் பேர் நடுத்தர வருடத்தினர் என்று ஆய்வு கூறுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் ஓட்டு வங்கியாக இவர்களை இருந்துள்ளனர். ஆனால் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என ஏழை மக்களை மட்டும் கவனித்தது. நடுத்தர மக்கள்களின் தேவைகளை கண்டு கொள்ளவில்லை. இதை சரி செய்யும் விதமாக பாஜகவானது நடுத்தர மக்களின் ஆதரவை பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் பெற்றது.
அவை மத்திய பட்ஜெட்டில் வருமான வரம்பை உயர்த்தி அவர்களை மகிழ்வித்தது எட்டாவது நிதி கமிஷன் அமைப்பு என்று அறிவிப்பு காரணமாக அரசு ஊழியர்களின் ஆதரவு பாஜகவிற்கு கிடைத்தது. ஆம் ஆத்மி கட்சியின் சரிவுக்கு முக்கிய காரணம் டெல்லியில் மோசமான சாலைகள், கழிவுநீர்கள் மற்றும் குண்டும் குழியுமான சாலைகளில் நீர் நிரம்புதல், சாலையில் குப்பைகளை கொட்டுதல் போன்றவைகளை கண்டு கொள்ளாமல் இருந்தது.இதுவே மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
மேலும் காற்று மற்றும் குடிநீர் மாசுபாடு போன்ற பிரச்சினைகளை சரி செய்வதிலும் அக்கட்சி ஆட்சியில் இருந்தும் அதிகாரத்திலிருந்தும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே கச்சேரி வாழ்மக்களுக்கு அளித்து வந்தார் தேர்தல் வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற தவறினார். இதனால கட்சி சரிவை சந்திக்க தொடங்கியது. முன்னாள் டெல்லி முதல்வர் கெஜரிவால் எதிர்மறை பிரச்சாரத்தில் மட்டுமே ஈடுபட்டார் இதனால் மக்களின் நம்பிக்கை அவர் இழந்தார் இதுவே அவர் கட்சி தோல்வி அடைய காரணமாக அமைந்தது.