டெல்லியும் நமதே, மேற்கு வங்காளமும் நமதாகும்: பா.ஜ.கவின் அடுத்த கட்ட தீவிர நடவடிக்கை!

டெல்லிக்கு அடுத்து மேற்கு வங்கத்திலும் ஆட்சியை பிடிப்போம் என பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர். மேற்கு வங்காளத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி அதற்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. மம்தா தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி 2019, 2024 லோக்சபா தேர்தலில் தொடர்ந்து ஆட்சியைப் பிடித்து அதற்கு சவாலாக இருந்து வருகிறது. ஆனால் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜக 2021 சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது.
நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியதை கட்சி தலைவர்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்த வெற்றி தொடர மேற்கு வங்கத்திலும் கடுமையான போட்டி நிலவும் என்று பாஜக உறுதியளிக்கிறது. டெல்லிக்கு அடுத்தது 2026 மேற்கு வங்கத்திலும் எங்களுக்கு தான் வாய்ப்பு அதிகம் இருக்கும் என்றும், போட்டிக் கடினமாக இருந்தால்தான் வெற்றி ருசியாக இருக்கும் என்றும், இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் சுவேந்து மற்றும் சுகந்தா மஜீம்தார் கூறியுள்ளார்கள்.
டெல்லி சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளித்து இருந்தது. இருப்பினும் டெல்லியில் வசிக்கும் வங்க மக்கள் யாருக்கு வாக்களித்தனர் என்று சுவேந்து அதிகாரியும், சுகந்தா மஜும்தாரும் பாஜாவுக்கு தான் ஓட்டு அளித்தனர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினர்.
Input & Image Courtesy: News