கல்வியை அரசியல் ஆக்கி தனது பெருமையை தொலைத்து கடைசி இடத்தில் நிற்கும் தமிழகம் -அண்ணாமலை!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எஸ் சமூக வலைதள பக்க பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழகம் தனது பெருமையை தொலைத்து என் கணிதத்திலும், தாய்மொழி அறிவிலும் கடைசி இடத்தில் உள்ளது.கல்வியை அரசியலாக்கி கல்வியின் தரத்தை குறைத்து தமிழக குழந்தைகளுக்கு சமமான வாய்ப்புகளையும் உலகத்தரம் வாய்ந்த கல்வியையும் கிடைக்காமல் செய்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவரது கட்சியினரும் வெட்கப்பட வேண்டும் .இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்தே பி. எம்.ஸ்ரீ உட்பட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு உறுதி அளித்தது.
உறுதி மொழியை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நிறைவேற்றினீர்களா இல்லையா? செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட நிதி அறிக்கைப்படி 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 35 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு இன்னும் 2024-25 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு நிதி விடுவிக்கப்படவில்லை. அப்படி இருக்கையில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யை பரப்ப வெட்கமாக இல்லையா?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.