ஆளும் கட்சியின் கூட்டம் போல் நடந்த தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா!கருப்பு முருகானந்தம்!

இன்று 2025 பிப்ரவரி 10 தஞ்சாவூர் அரண்மனை தேஸ்வதானம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது இவ்விழா மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஆலோசனைப்படி நடத்தப்பட்டது
ஆனால் இந்த குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்வதற்கு அனுமதி அட்டை வழங்குவதில் பொதுமக்கள் பல சிரமங்களுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் பக்தர்களுக்கு முறையாக அனுமதி அட்டை வழங்கப்படவில்லை எனவும் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்
மேலும் அவர் மாரியம்மன் கோவிலின் திருப்பணிக்காக வசூலிக்கப்பட்ட நன்கொடை பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அனுமதி அட்டை வழங்குவதில் மாவட்ட ஆட்சியர் நடுநிலையுடன் நடந்து கொள்ள வில்லை எனவும் நிதி கொடுத்தவர்களுக்கு முறையாக பாஸ் கொடுக்காமல் திமுக நிர்வாகிகள் அதிகமாக கொடுத்துள்ளார் இது குறித்து கேட்பதற்கு அவரை அழைத்த பொழுதும் அவர் செவி சாய்க்கவில்லை போராட்டம் நடத்துவோம் என்று கூறியதற்கு பிறகுதான் எங்கள் கட்சிக்கு ஒரு பத்து அனுமதி அட்டையை வழங்கினார்
பொது மக்களுக்கானவராக பொதுவானவராக இருக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர் ஆளும் கட்சியினரை போல நடந்து கொண்டுள்ளார் இது என்ன கோயில் குடமுழுக்கா அல்லது திமுக கட்சி கூட்டமா? என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பி உள்ளார்