Kathir News
Begin typing your search above and press return to search.

செந்தில்பாலாஜி அமைச்சராவதில் ஏன் இவ்வளவு அவசரம்?அவர் அமைச்சராக தொடர வேண்டுமா?நீதிமன்றம் வைத்த செச்!

செந்தில்பாலாஜி அமைச்சராவதில் ஏன் இவ்வளவு அவசரம்?அவர் அமைச்சராக தொடர வேண்டுமா?நீதிமன்றம் வைத்த செச்!
X

SushmithaBy : Sushmitha

  |  12 Feb 2025 9:59 PM IST

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியதாக சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கிட்டத்தட்ட அந்த வழக்கின் தீர்ப்பு வராமலேயே ஒரு வருடத்திற்கு மேலாக சிறைவாசத்தில் இருந்து பிறகு ஜாமினின் சமீபத்தில் வெளியானார்

ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி அடுத்த நாளே அமைச்சராக பொறுப்பேற்கவும் பட்டார் இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது மேலும் அமைச்சர் பதவியில் செந்தில்பாலாஜி இல்லை என்ற காரணத்தை காட்டியே அவருக்கு ஜாமின் கொடுக்கப்பட்டது ஆனால் அவர் ஜாமீன் பெற்ற அடுத்த நாளே அமைச்சராக பதவி ஏற்கப்பட்டுள்ளார் அவர் மீதான வழக்கு விசாரணையும் கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது இதனால் விசாரணை பாதிக்கப்படுவதை குறிப்பிட்டு செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டது

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளும் செந்தில் பாலாஜிக்கு எதிரான அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்திருந்தனர் இதனை அடுத்து இந்த வழக்கு இன்று 12 பிப்ரவரி 2025 விசாரணைக்கு வந்தது அந்த விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதற்கும் முன்பு இந்த வழக்கு தொடர்பாக வந்த தடயவியல் நிபுணர் தற்போது வரவில்லை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜியும் அமைச்சராக இருப்பதால்தான் அவர் பயத்தில் வர மறுக்கிறார் அதனால் அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை முன்வைத்து

அமலாக்க துறையின் வாதத்தை கேட்ட நீதிபதிகளும் ஜாமினை வெளிவந்த உடனேயே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி ஏற்க ஏன் இவ்வளவு அவசரம் 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சாட்சிக்கு இருக்கும் பொழுதும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால் என்ன நடக்கும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா என்பதை தெரிவிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News