Kathir News
Begin typing your search above and press return to search.

புதிய கல்வி கொள்கை பற்றிய முழு விளக்கத்தை அடுக்கிய அண்ணாமலை:வைரலாகும் காணொளி!

புதிய கல்வி கொள்கை பற்றிய முழு விளக்கத்தை அடுக்கிய அண்ணாமலை:வைரலாகும் காணொளி!
X

SushmithaBy : Sushmitha

  |  17 Feb 2025 1:36 PM

தமிழகத்தில் தொடர்ச்சியாக கல்விக் கொள்கை எதிர்ப்பு நீடித்து வருகிறது குறிப்பாக ஹிந்தி எதிர்ப்பும் உச்சமாக உள்ளது இந்த எதிர்ப்பை தமிழகத்தில் ஆண்டு வருகின்ற திமுக அரசே கையில் எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது ஆனால் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் மாணவர்கள் எந்த மொழியை படிக்க விரும்புகிறார்களோ அந்த மொழியை படிக்கட்டும் என்ற கருத்தே மேலோங்கி உள்ளது இந்த நிலையில் மத்திய அரசு கொண்டுள்ள புதிய கல்வி கொள்கை பற்றி விளக்கமளித்து பேசியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

2019 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை கமிட்டி கொடுத்த பொழுது அதில் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டிருந்தது, முதல் மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும் இரண்டாவது மொழி ஆங்கிலமாகவும் மூன்றாவது மொழி ஹிந்தி மொழியாக இருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது

ஆனால் இந்த அறிக்கையை பிரதம நரேந்திர மோடி மூன்றாவது இந்தி கட்டாயம் மொழியாக இருக்க வேண்டும் என்பதை மாற்றி இந்திய மொழிகளில் உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார் ஆனால் இன்றளவும் தமிழகத்தில் 1965 ஆம் ஆண்டு பழைய பஞ்சாங்க மாடலை தூக்கிக்கொண்டு வருகின்றனர் ஹிந்தி மொழியை திணிக்கிறார்கள் ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறோம் என கூறுகின்றனர்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 52 லட்சம் பேர் படிக்கிறார்கள் தனியார் பள்ளிகளில் படிக்கும் 56 லட்சம் மாணவர்களில் 30 லட்சம் பேர் வெவ்வேறு பாடத்திட்டங்களில் மூன்று மொழிகள் படிக்கிறார்கள் ஏன் இவ்வளவு பேசும் அமைச்சர் மகேஷ் மகன் தனியார் பள்ளியில் தமிழ் மொழிக்கு பதிலாக பிரஞ்சு மொழியை படிக்கிறார் உங்கள் மகன் தனியார் பள்ளியில் பிரஞ்சு படிக்கலாம் ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் 52 லட்சம் பேர் தட்டு தடுமாறி மரத்தடி வெயிலில் உடைந்த கரும்பலகையை வைத்துக்கொண்டு குறைவான ஆசிரியர்கள் இருக்கும் நேரத்தில் அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் இதை எப்படி ஏற்க முடியும்

பாஜகவில் எங்கள் பிள்ளைகள் எங்கு படிக்கின்றனர் என்று நான் வெள்ளை அறிக்கை கொடுக்கிறேன் முதல்வர் ஸ்டாலின் உங்கள் பேரன் எங்கு படிக்கிறார் என்று சொல்லுங்கள் நம் ஊரில் நம் மொழி பிடித்து உயிரை கொடுத்து நிற்போம் உறுதியாக நிற்போம் தமிழ் மொழிக்கு எப்போதும் அழிவு வராது தமிழகத்திற்கு கல்வியில் என்ன பணம் கொடுக்க வேண்டுமோ அதனை மத்திய அரசு தரும் அமைச்சர் பிரதான் பேசியதை திரித்தி மாற்றி பேசாதீர்கள் என்று காணொளியில் பேசியுள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News