தமிழக மாணவர்கள் பன்மொழியை கற்றால் என்ன தவறு:கல்வியிலும் அரசியலா?

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பத்திரிகையாளர்களிடம் அனைத்து மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது விதி அதை அனைத்து மாநிலங்களும் ஏற்று கொண்டுள்ளனர் தமிழக அரசு மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறது என கேள்வி எழுப்பியிருந்தார்
அமைச்சரின் இந்த கேள்விக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்திற்கு நிதி கிடையாது என்று மத்திய அமைச்சர் கூறுவதை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள் எங்கள் உரிமையை தான் கேட்கிறோம் என கண்டனம் தெரிவித்தார் திமுக போராட்டத்தையும் அறிவித்தது
இந்த நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தாய் மொழிக்கு புதிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன் தமிழகத்தின் மீது ஹிந்தி மொழியை திணிக்கவில்லை மேலும் முன்மொழிக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் அல்ல பிற இந்திய மொழிகளையும் மாணவர்கள் படிக்கலாம்
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பன்மொழி அம்சத்தை கற்பதால் என்ன தவறு தமிழகத்தில் உள்ள சிலர் இதனை அரசியல் செய்கின்றனர் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்