இன்று கேள்வி கேட்கும் திமுக எம்பிகள் காங்கிரஸ் ஆட்சியில் என்ன செய்தார்கள்?வைராலும் நிதியமைச்சரின் அவேச வீடியோ!

கடந்த 13ஆம் தேதி அன்று மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என திமுகவின் குற்றச்சாட்டுக்கு மாநிலங்கள் அவையில் தமிழிலே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசமாக விளக்கமளித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
அதில் பேசிய நிர்மலா சீதாராமன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தமிழகத்திற்கு நிறைய செய்துள்ளது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட மத்திய துறை திட்டமாக அங்கீகரித்து அதற்கான ரூபாய் 63 ஆயிரத்து 746 கோடியில் 65% சதவிகித நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது 2019 ஜனவரி 20 அன்று தமிழக பாதுகாப்பு தொழில் துறை வழித்தடம் தொடங்கப்பட்டது இதற்காக 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டதாக தெரிய வருகிறது
பாதுகாப்புத் தொழில் துறையில் வழித்தடத்தை பிரதமர் மோடி அறிவித்த பொழுது அதன் முதல் வழித்தடம் தமிழ்நாட்டிற்கு தான் வழங்கப்பட்டது அதற்குப் பிறகுதான் உத்திரபிரதேசத்திற்கே வழங்கப்பட்டது மேலும் லட்சிய மாவட்டத்தின் கீழ் பிரதமரின் மித்ரா மெகா ஜவுளி பூங்கா திட்டம் விருதுநகருக்கு வழங்கப்பட்டுள்ளது 2019 ஆம் ஆண்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது அதன் கட்டுமான பணிகளும் தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது என கூறினார்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழகத்திற்கு செய்தவற்றை ஒவ்வொன்றாக அடுக்கிய சமயத்தில் திமுக எம்பிக்கள் சிலர் ஆனால் திட்டம் இன்னும் முடியவில்லை என சத்தமாக கூற அதற்கு நிர்மலா சீதாராமன் ஒவ்வொன்றை பற்றியும் துருவி துருவி கேட்கும் இவர்கள் காங்கிரஸ் கூட்டணியில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்த பொழுது தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது பிறகு பிரதமர் நரேந்திர மோடி அரசு தான் அந்த தடையை நீக்கியது
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாநில அரசே சட்டம் வகுக்கலாம் என்பதையும் மோடி அரசு தான் தெரிவித்தது காங்கிரஸ் தலைமையிலான அரசு ஜல்லிக்கட்டு தடை செய்த பொழுது எங்கே போனது இந்த திமுக என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியதோடு தமிழகத்திற்கு இதுவரை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த ஒவ்வொரு நலத்திட்டங்கள் பற்றியும் அதில் பயன் அடைந்து வரும் மக்கள் தொகை பற்றியும் ஒதுக்கப்பட்டு வருகின்ற நிதி பற்றியும் பட்டியலிட்டு பேசினார்