பெண் போலீசாரிடம் பாலியல் வன்கொடுமை: அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னையில் உள்ள பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் போலீஸ் பாலியல் சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை பலவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் போலீஸ் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரயிலில் இருந்து இறங்கி நடைமேடையில் நடந்து கொண்டிருந்தபோது தெரியாத நபரால் பாலில் துன்புறுத்தளுக்கு ஆளாக்கப்பட்டு, புகார் அளிக்கப்பட்டுள்ளது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலிஸ்சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் போலீஸ் ஒருவர் பாலியல் வண்ணம் அமைக்க அழைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது என்றும் அரசின் மீது போலீசாரின் மீது சமூக விரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச்செய்தி வெளிவருகிறது அரசு தரப்பில் இருந்தும் போலீஸ் தரப்பில் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை பெண்கள் எங்கு சென்றாலும் பாதுகாப்பு இல்லாத நிலைமையை நீடிக்கிறது இது பெண்களின் குடும்பத்திற்கு பெரும் அச்சத்தை ஆழ்த்தியுள்ளது.
திமுக அரசும், போலீசாரும் செயல்படாமல் இருந்தால் பொது மக்களே தங்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமுதாயத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணராமல் இருக்கிறார் முதல்வர், இவ்வாறு அண்ணாமலை கூறுகிறார்.