அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள்? அண்ணாமலை கேள்வி!

மொழி கற்கும் வாய்ப்பை தமிழக அரசு ஏன் தடுக்கி றது? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட விடியோவில் பேசும் போது, தனியார் பள்ளிகளில் படிக்கும் திமுக கட்சியைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் மட்டும் 3 மொழிகள் கற்கலாம்; அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மக்களின் குழந்தைகள் படிக்க வாய்ப்பு மறுப்பதா? அரசுப் பள்ளிகளில் இலவசமாக 3 மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள்? உங்களுக்கொரு நியாயம், எளிய மக்களுக்கு ஒரு நியாயமா?
அமைச்சரின் மகன் பிரஞ்ச் படிக்கிறார். கல்வித் துறை அமைச்சரின் மகன் தமிழுக்கு பதிலாக பிரெஞ்சு மொழி படிக்கிறார். ஆளுங்கட்சி தலைவர்களின் குழந்தைகள் முதல் கவுன்சிலர்களின் குழந்தைகள் வரை 3 மொழிகளை படிக்கின்றனர். இது தவறாக இல்லாதபோது, அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் 3 மொழிகள் படிப்பதை ஏன் தடுக்கிறீர்கள்? தமிழை வைத்து அரசியல் செய்கிறீர்கள். மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் கூட சரியாகத் தெரிய வில்லை. தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று 2019-இல் கமிட்டி கொடுத்த அறிக்கையை வேண் டாம் என திருத்தியவர் பிரதமர் மோடி.
தாய்மொழி, ஆங்கிலம் தவிர பிடித்த ஒரு மொழியை கற்றுக்கொள் ளும்படி பிரதமர் அறிக்கையை திருத்தினார். ஹிந்தி தெரியாத மாநிலத் தவர் எப்படி யோசிப்பார்கள் என பிரதமர் நினைத்து இதைச் செயல்ப டுத்தி இருக்கிறார். ஆனால் ஹிந்தி மொழியை திணிப்பதாக தவறாக நினைத்து தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போ வதாக தெரிவித்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.