நாள்,நேரம் குறிங்கள் தனி ஆளாக வருகிறேன்,அதிரடி காட்டிய அண்ணாமலை!

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான விவகாரம் தமிழக ஆளும் அரசுக்கும் பாஜகவிற்கும் கடும் விவாதத்தையும் மோதலையும் ஏற்படுத்தி உள்ளது இதனால் இரு கட்சித் தலைவர்களும் இது குறித்த விமர்சனங்களை மாறி மாறி முன் வைத்த வருகின்றனர் இந்த நிலையில் இன்று பிப்ரவரி 20 சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை பிரச்சனையை திசை திருப்ப முயற்சிக்கிறார் வர சொல்லுங்க நான் வீட்டு கிட்ட தான் இருப்பேன் தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் அவரை வர சொல்லுங்கள் என்று சவால் விட்டு பேசி இருந்தார்
துணை முதல்வரின் இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் நாளை காசி தமிழ் சங்கமம், கும்பமேளாவில் பங்கேற்க இருப்பதாகவும் அதற்குப் பிறகு கோவைக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வர இருப்பதாகவும் அடுத்த வாரம் சென்னைக்கு வருகிறேன் அண்ணா சாலையில் எங்கு வரவேண்டும் நேரத்தையும் நாளையும் இடத்தையும் திமுகக்காரனே குறிக்கட்டும் அங்கு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்
மேலும் துணை முதல்வர் உதயநிதி மேடையில் கெட் அவுட் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார் திமுகவின் ஐடிவிங் இரவு முழுவதும் அமர்ந்து கெட் அவுட் மோடி என எவ்வளவு டுவீட் போட முடியுமோ போடட்டும் நாளை காலை 6 மணிக்கு சரியாக என்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இருந்து கெட் அவுட் ஸ்டாலின் என டுவீட் போடுவேன் எவ்வளவு டுவீட் போகுதுன்னு பார்க்கிறேன் முழு இந்தியாவையும் சேர்த்து எங்களை விட அதிக டுவீட் போட்டு காண்பிக்க வேண்டும் சவால் விடுகிறேன் என்று மறு சவாலை அண்ணாமலை முன்வைத்துள்ளார்