தீயசக்தி தி.மு.கவை வேரோடு அகற்ற வேண்டும்: அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுத்த அண்ணாமலை!

கரூரில் 2025 மத்திய பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. இதற்கு முன் தினம் திமுக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும் போது, இனி மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் முதலில் Go Back மோடி என்று சொன்னோம். இனிமேல் Get Out என்று சொல்ல போகிறோம் என்று உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்ணாமலை கூறும் பொழுது, திராவிட முன்னேற்றக்கழகத்தின் தற்குறி உதயநிதி ஸ்டாலின் அவருக்கு நான் சொல்லுகிறேன் உன்னால் முடிந்தால், சரியான ஆளாக இருந்தால் மோடியை பற்றி பேசி பாருடா பார்க்கலாம். பிறகு என்ன நடக்கும் என்று தெரியும்.
உங்கள் மொழியில் நான் பேசுவேன் நீங்கள் சொல்லி பாருங்கள் என்று உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மேலும், திமுகவின் ஆட்சி எப்படி இருக்கிறது என்றால் ஒரு பானையில் இருந்த கள்ளை குரங்கு குடித்து விடுகிறது. இதனால் தடுமாடிக் கொண்டிருந்த போது அதனை தேள் கொட்டி விடுகிறது.
கள்ளை குடித்த குரங்கை தேள் கடித்துவிட்டால் அந்த குரங்கு எப்படி நடந்து கொள்ளுமோ அப்படித்தான் திமுக ஆட்சி இருக்கிறது. விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தீயசக்தி திமுகவை வேரோடு அகற்ற வேண்டும் என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள்.