சிபிஎஸ்இ பள்ளி நடத்தும் திருமாவளவனே தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பாரா?

தமிழ்நாட்டில் தேசிய கல்வி கொள்கை 2020 ஐ இந்தி திணிப்பு என எதிர்த்துவருகிறது திமுக அரசு ஆனால் பாஜக அல்லாத அரசுகள் உள்ள மாநிலங்களில் அரசியல் வேறுபாடு இருந்தாலும் அம்மாநிலத்தில் மக்களின் நலனிற்காக தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தி உள்ளது என பாஜக தரப்பில் கூறப்படுகிறது
தமிழகத்தில் திமுக மட்டுமின்றி திமுகவின் கூட்டணி கட்சிகளும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து பேசினார்
இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில் அண்ணன் திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது
சென்னை வேளச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் Blue Star Secondary School என்ற பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர் அண்ணன் திருமாவளவன் தான்
அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்? என கேள்வியை எழுப்பியுள்ளார்