Kathir News
Begin typing your search above and press return to search.

ஏழை மாணவர்களின் கல்வியை அரசியல் ஆக்காதீர்கள்: தமிழக முதல்வருக்கு வந்த கடிதம்!

ஏழை மாணவர்களின் கல்வியை அரசியல் ஆக்காதீர்கள்: தமிழக முதல்வருக்கு வந்த கடிதம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 Feb 2025 8:57 PM IST

புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார். மாணவர்களின் கல்வியை அரசியல் ஆக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதத்தில் கூறும் போது, கல்வியில் அரசியலை புகுத்தாதிர்கள் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அரசியல் கருத்து வேறுபாடுகளை தாண்டி முடிவெடுக்க வேண்டும். நமது மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம்.


புதிய கல்விக் கொள்கையை குறுகிய மனப்பான்மையுடன் பார்க்க வேண்டாம் இந்தக் கல்விக் கொள்கையின்படி எந்த மொழியையும் எந்த மாநிலத்திலும் திணிக்கும் நோக்கமில்லை. தாய்மொழியில் தரமான கல்வி பெறுவதை புதிய கல்விக் கொள்கையை உறுதி செய்து கொள்கிறது. இந்த புதிய கல்விக் கொள்கையால் நமது மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை பாதுகாக்கப்படும்.


பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. இக்கல்வி கொள்கையை ஏற்க மறுப்பதால் ஆசிரியர்கள் மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.காசி தமிழ்ச் சங்கமும் மூலம் தமிழ் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தப்பட்டுள்ளது தமிழ் மொழியை பிரதமர் மோடி உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். எந்த ஒரு மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிக்கும் முயற்சி இங்கு மேற்கொள்ளப்படவில்லை. மூன்றாவது மொழி விருப்பத்தின் அடிப்படையிலேயே தேர்வு செய்து கொள்ளலாம்.


சமூக முன்னேற்றத்தில் பிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மாணவர்கள் அவர்கள் விரும்பும் கல்வியை விரும்பிய மொழியில் கற்பதை ஊக்குவிக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என தர்மேந்திர பிரதமர் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News