தாய் மொழிக்கு முக்கியத்துவம் தரும் கல்விக் கொள்கை: அண்ணாமலை கூறியது என்ன?

தமிழை அடிப்படையாக வைத்து பல மொழிகளில் கற்போம் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நம் எண்ணம் படைப்பாற்றல் தாய்மொழி வாயிலாகவே நடக்கிறது ஒரு மனிதன் பேசும்போது எழுதும் முழுதும் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனை திறன் பெருகும். அடிப்படை கல்வி என்பது தாய் மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது அவசியம். உலக நாடுகள் அனைத்தும் இவற்றையே வலியுறுத்துகின்றன.
உலக நாடுகளின் கூட்டமைப்பான யுனெஸ்கோ தாய்மொழி வாயிலாகவே பன்மொழி கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கல்வி கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. இதன்படியே பிரதமர் கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி அடிப்படை கல்வி வலியுறுத்துகிறது. இன்றைய உலகில் அனைத்தும் நவீனமயமாவதால் மொழிகளை இணைப்பதும் கட்டாயம் மற்றும் இன்றியமையாதது.
பலமொழிகளை கற்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு உருவாக்குவதும் முக்கியமான பொறுப்பு. நம் தாய் மொழியாம் தமிழை அடிப்படையாக வைத்து பல மொழிகளில் கற்போம் தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம். இந்தப் புதிய கல்விக் கொள்கையின் மூலம் தமிழ் மொழி தெரியாத மாணவர்களும் புதிய மொழியை கற்க இக்கொள்கை உதவி புரியும். அவர்களும் ஆர்வமாக தமிழ் மொழியை கற்க வழிவகை செய்யும். இவர் அதில் குறிப்பிட்டுள்ளது.