கல்வியில் வீண் அரசியல் செய்ய வேண்டாம்: தமிழக அரசுக்கு அண்ணாமலை வேண்டுகோள்!

தமிழக அரசு கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்து, மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய தமிழக அரசு உதவ வேண்டும், இன தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதற்கான பதில் கடிதத்தில் தமிழக அரசு பல மழுப்பல் காரணங்களை முன்வைக்கின்றன, ஹிந்தி தவிர்த்து பிற மொழிகள் கற்பிக்கப் போதிய ஆசிரியர்கள் இல்லை என்றும். ஹிந்தியை மட்டுமே மூன்றாவது மொழியாக கொண்டு வரவில்லை என்பதை தமிழக அரசு தற்போது ஒப்பு கொண்டுள்ளது. பல ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் தற்பொழுது இருக்கும் நிலையில், நீங்கள் வேறு இந்திய மொழிகளுக்கான ஆசிரியர்களை நியமித்து விட்டால் திமுக அரசை யாரும் நம்ப மாட்டார்கள்.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களிடையே கருத்துக்கணிப்பு மேற்கொண்டு, அதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளலாம். எந்த மொழிகளை கற்க மாணவர்கள் விரும்புகின்றனர் என்பதை கருத்துக்கணிப்பின் மூலம் முடிவு செய்து அதன் அடிப்படையில் அந்தந்த மொழிகளைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை துவங்க வேண்டும்.
திமுக அரசு நினைத்தால் தமிழ் மொழியில் பட்டம் பெற்ற ஆசிரியர்களை தமிழக எல்லை மாவட்டங்களில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு உறுதி செய்யலாம். எனவே கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்து தமிழக பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய தமிழக அரசு தான் உதவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.