செங்கல்லை அகற்றுவது மட்டுமின்றி தமிழக சட்டப்பேரவையில் செங்கோலையே நிறுவுவோம்-தமிழிசை சௌந்தரராஜன்!.

பிப்ரவரி 25 இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் 2026 தேர்தலை நோக்கி பாஜக வெற்றிகரமாக செயலாற்றி கொண்டு வருகிறது தமிழகத்தில் தற்பொழுது உள்ள திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு முற்றிலும் தோல்வி அடைந்த அரசாக தற்போது உள்ளது மேலும் அவர்கள் மொழியை வைத்து அரசியல் செய்து கொண்டுள்ளனர்
அரசு ஊழியர்கள் அரசு மருத்துவர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் கொலை கொள்ளை பாலியல் பிரச்சனைகளும் அதிகமாகிவிட்டது இதில் சுகாதாரத் துறையும் பள்ளி கல்வித்துறையின் தன்னுடைய இரு கண்கள் என கூறிக் கொண்டு வரும் முதல்வரே அரசு மருத்துவமனையை தவிர்த்து விட்டு தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டு கொள்கிறார்
முதல்வர் திமுக அமைச்சரின் குழந்தைகள் முதல் பேரப்பிள்ளைகள் வரை எங்கு படிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் அவர்களுக்கு மும்மொழித் தேவை நமக்கு இருமொழி மட்டும்தானா என்று கேள்வி எழுப்பி உள்ளார்
மேலும் பேசியவர் ரயில் நிலையங்களில் ஹிந்தியில் எழுதப்பட்ட பெயர் பலகைகளை அழித்து குறுகிய மனப்பான்மையோடு செயல்பட்டு கொண்டு வருகின்றனர் திமுகவினர் அறிவாலயத்தில் இருந்து ஒரு செங்கலை கூட அகற்ற முடியாது என கூறிக் கொண்டு அச்சத்துடன் நடமாடுகிறார்கள்
செங்கல்லை அகற்றுவது மட்டுமில்லாமல் சட்டப்பேரவையில் செங்கோலையே நாங்கள் நிறுவுவோம் என தெரிவித்துள்ளார்