தொகுதி சீரமைப்பு நடக்கும் என மத்திய அரசு எங்கும் சொல்லவில்லை,கபட நாடகம் எதற்கு!மாஸ் ரிப்ளே கொடுத்த அண்ணாமலை!

பிப்ரவரி 25 தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தமிழகம் மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது அதனால் வருகின்ற மார்ச் 5ஆம் தேதி அன்று அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துவதாக அறிவிக்கிறோம் இதற்காக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 40 கட்சிகளையும் அழைக்க முடிவு செய்துள்ளோம் அவர்களுக்கு முறைப்படியான அழைப்பு விரைவில் விடுவோம் இந்த அனைத்து கட்சிகள் கூட்டத்தில் தொகுதி மறு சீரமைப்பு பற்றி ஆலோசிக்கப்படும் ஏனென்றால் தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்றும் தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் கூறினார்
ஆனால் தொகுதி மறுசீரமைப்பு வரும்போது தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என முதல்வரிடம் யாரோ சொல்லியிருக்கிறார்களாம் 800 தொகுதிகள் தான் வரும் தமிழகத்திற்கு 22 வரவேண்டும் ஆனால் பத்து தான் வரும் என முதல்வரிடம் யாரோ கூறியுள்ளார்களாம் அவரை கண்டுபிடிக்க தான் முயற்சிக்கிறேன்
மத்திய அரசு தொகுதி சீரமைப்பு நடக்கும் என எங்கும் சொல்லவில்லை இதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் தமிழகத்தை வழிநடத்த முதல்வருக்கு தகுதி இருக்கிறதா என்று சந்தேகம் எனக்கு உள்ளது யாரும் பேசாத பொழுது திடீரென அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்ட வேண்டும்
அதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடி லோக்சபா தேர்தலின் பிரச்சாரத்தின் போது தொகுதி மறு சீரமைப்பை பற்றி காங்கிரஸ் பேசுகிறது அப்படி சீரமைப்பு ஏற்பட்டால் தென் மாநிலங்களில் 100 தொகுதிகள் காணாமல் போகும் அதை நான் ஏற்கவில்லை என்று பேசினார் இதுதான் அதிகாரப்பூர்வ கருத்து மற்றபடி பாஜக தலைவரோ தேசிய ஜனநாயக கூட்டணியோ அமைச்சரோ இது குறித்து பேசவில்லை எதற்காக முதல்வர் கபட நாடகத்தை அரங்கேற்ற வேண்டும் என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை