ஹிந்தி திணிப்பு என தமிழகத்தில் நாடகமாடுவது ஏன்? பா.ஜ.க தலைவர் அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கையில் கூறும் போது, மும்மொழி கொள்கையை ஹிந்தி திணிப்பு என புதிய கல்விக் கொள்கைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களில் சில பேர் ஹிந்தி எழுத்துக்களை அளிக்க போகிறோம் என கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் சிலர் சுற்றி திரிகின்றனர். அவர்கள் அமலாக்கத்துறை இயக்குநரகம், வருமானவரித்துறை அலுவலகம் போன்ற இடங்களுக்கு சென்றால் இந்த அலுவலகங்களில் அடிக்கடி ஊழல் செய்யும் அமைச்சர்களின் பெயர்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
மக்களை குழப்புவதற்காகவே திமுகவினர் இவ்வாறு செய்கின்றனர். மொழிகளை கற்றுக் கொடுக்கும் சிபிஎஸ்இ மெட்ரிகுலேஷன் பள்ளிகளை அவர்களே நடத்துகின்றனர். தங்கள் குழந்தைகளையும் அதிலே சேர்த்து படிக்க வைப்பார். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழிக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயம் இல்லை எனக் கூறியும், நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பழமொழிகளில் ஹிந்தி ஒரு விருப்பம் மொழி மட்டுமே என பலமுறை தெளிவு படுத்தியும், திமுக ஹிந்தி திணிப்பு என வேண்டுமென்று பொய் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றன.
இருமொழிக் கொள்கை மட்டும் தான் தமிழகத்திற்கு என்றால், அனைத்து பள்ளிகளிலும் இருமொழிக் கொள்கை மட்டுமே பின்பற்ற வேண்டும். ஹிந்தி மொழி திணிப்பு என திமுகவினர் கூறி பொய்யாக நாடகம் ஆடுகின்றன.தனது ஹிந்தி கூட்டணி கட்சியினரையும் தமிழகத்துக்கு அழைத்து வந்து அவர்கள் கையிலும் கருப்பு பெயின் டப்பாவை கொடுத்து இந்தி எதிர்ப்பை காட்ட வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.