தமிழ் எங்கள் உயிர், தமிழை எவராலும் அழிக்க முடியாது: பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு!

தமிழ் எங்கள் உயிர் தமிழை எவராலும் அழிக்க முடியாது அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கோவையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகிறார். இது தொடர்பாக அவர் கூறும் பொழுது, தமிழகத்தில் காமராஜர் காலத்தில் 30 ஆயிரம் பள்ளிகள் துவங்கப்பட்டன அத்தனையும் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க துவங்கப்பட்டவை.ஆனால் தற்போது அரசியல்வாதிகள் பலர் தாங்களே தனியார் பள்ளிகளை நடத்துகின்றனர்.
அந்தப் பள்ளிகளில் ஹிந்தி மொழி கற்றுக் கொடுக்கின்றனர் இல்லையா? என்று விவரங்களை அவர்கள் வெளியிட வேண்டும். தமிழ் நம்முடைய உயிர் மொழி அதை எவர் வந்தாலும் அழிக்க முடியாது. அதே நேரத்தில் தமிழை வைத்து பிழைப்பு நடத்த வேண்டுமென்று யார் நினைத்தாலும் அது ஏற்றுக்கொள்ள விடமாட்டோம்.
மத்திய அரசு பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி தந்தாலும், மும்மொழிக் கொள்கையை தமிழகத்திற்குள் வரவிடமாட்டோம் என தமிழக முதல்வர் கூறி இருப்பது மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாத தலைவரின் பேச்சாக உள்ளது. இதை நான் ஆணவ பேச்சாக பார்க்கிறேன், முறையற்ற பேச்சாக இருக்கிறது என்று அவர் கூறினார்.