தமிழக முதல்வர் பொய் சொல்கிறார்:தமிழகத்தில் லோக்சபா தொகுதிகள் குறைக்கப்படாது-உண்மையை முன்வைத்த அமித் ஷா!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென மார்ச் 5ஆம் தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்துவதாக அறிவித்தார் மேலும் அந்த கூட்டத்தில் தொகுதி சீரமைப்பு பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளை மத்திய அரசு குறைக்க முயற்சித்து வருவதாகவும் கூறினார்
இந்த நிலையில் கோவை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு வணக்கம் நமஸ்காரம் என தனது உரையை தொடங்கியவர் லோக்சபா தொகுதி சீரமைப்பு பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார் எனவும் தமிழகத்தில் லோக்சபா தொகுதிகள் குறைக்கப்படாது தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்குமே தவிர குறையாது என்று தெரிவித்துள்ளார்
மேலும் பிரதமர் மோடி தலைமையிலான நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடுத்தர வர்க்கம் குறு சிறு தொழில் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பட்ஜெட் தந்துள்ளார் ஒடிசா ஆந்திரா பீகார் ஹரியானா மாநிலங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது 2025 டெல்லியில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது 2026 பாஜக தமிழ்நாட்டின் வெற்றியுடன் தொடங்கும் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டிய நேரம் இது என பேசியுள்ளார்