தமிழக முதல்வர் வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி: அண்ணாமலை சவால்!

2026 இல் முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக வீட்டுக்கு அனுப்பப்படுவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். கோவை மாவட்ட பாஜக அலுவலகத் திறப்பு விழாவில் நடந்தது. இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். பின்னர் அவர் அலுவலகத்தை பார்வையிட்டர், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை,முன்னாள் தலைவர்கள் தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பாஜக எம்.எல்.ஏ மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசும் போது, பாஜக தேசிய தலைவர் நட்டா 5 வருடமாக நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கும் வேளையில்,பாஜக ஆட்சியை பிடித்துக் கொண்டு வருகிறது. தேசிய தலைவராக இருந்த அமித்ஷா எல்லா மாநிலங்களிலும் பாஜக அலுவலகம் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் ப மற்றும் நிதி. அவற்றை ஒவ்வொரு உறுப்பினரும் வீடாக கோவிலாக மாற்ற வேண்டும்.
எல்ல பாஜக அலுவலகத்திலும் நூலகங்கள் இருக்கிறது. நாம் வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறோம். பாஜக வளர்ச்சி தமிழகத்தில் மக்கள் மனதில் வளர ஆரம்பித்து விட்டது, பிரதமர் மோடி மக்களுக்காக ஏற்படுத்தும் எந்தத் ஒரு திட்டத்தையும் யாராலும் தடுக்க முடியாது.
பிரதமர் மோடி நடுத்தர மக்களுக்காக யோசித்து ஆரம்பித்து மருந்தகத்தை தமிழக அரசு அனுமதி அளிக்கும் மறுத்துவிட்டது ஆனால் அவற்றை காப்பியடித்து முதல்வர் மருந்தகம் என்று ஸ்டாலின் ஆரம்பித்துள்ளார். பிரதமர் மோடி தனது பெயரை எந்தத் திட்டத்திற்கும் வைத்துக் கொண்டதில்லை.
2026 இல் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்று விட்டால் அன்றைக்கு தான் தமிழகத்திற்கு முழு சுதந்திரம் கிடைக்கப் போகிறது. புதிய தலைவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது நமது கடமை,கட்சியில் புதிய தலைவர் பழைய தலைவர் என்ற வேறுபாடு இல்லை ஒற்றுமையாக நாம் இணைந்து பாடுபட வேண்டும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 2026 வரும் என்று நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.